Tuesday, April 21
Shadow

விஜய் வழியில் விஜய் ரசிகர்கள் செய்த விஷ்யம் குவியும் பாரட்டு

எண்ணிலடங்கா ரசிகர்களை கொண்டவர் தளபதி விஜய் .இவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை விஜய் மக்கள் இயக்கத்தின் கீழ் செய்து வருகின்றனர்.

அதேபோல் தென் சென்னை மாவட்டம் விருங்கம்பாக்கம் பகுதி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மன்ற தலைவர் வேல்முருகன் ,சண்முகம் ,பாலாஜி ஆகியோரின் ஏற்பாட்டின் கீழ் சத்யா நகர் பகுதி சூளைப்பள்ளம் பகுதியில் 3 கிளைமன்றங்கள் திறக்கப்பட்டது.

இதில் பொதுமக்களுக்கு 60 குடங்கள் மற்றும் ,100 குழந்தைகளுக்கு நோட்டுப்புத்தகங்கள் மற்றும் 120 குழந்தைகளுக்கு பேனா ,பென்சில்கள் ஆகியவை தளபதி விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் திரு .புஸ்ஸி N.ஆனந்த் (EX MLA ) அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தென் சென்னை மாவட்ட தலைவர் அப்புனு மற்றும் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .