தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியாவே வியந்து பார்க்கும் நடிகர் ரஜினிகாந்த். இவருடைய படங்கள் வருகின்றது என்றாலே திரையரங்கிற்கு திருவிழா தான்.
அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த வருடம் திரைக்கு வந்த படம் கபாலி. இப்படம் தான் ஓவர்சீஸிலேயே ரூ 100 கோடி வசூல் செய்த படம்.
இதன் பிறகு விஜய்யின் மெர்சல் ரூ 77 கோடி வசூல் செய்து இரண்டாம் இடத்தில் உள்ளது, இந்நிலையில் சன் தொலைக்காட்சியில் வரும் பொங்கலுக்கு கபாலி படம் ஒளிப்பரப்பவுள்ளார்கள்.
அதனால் சன் தொலைக்காட்சிக்கு TRP எகிறும் என்று நினைத்தால், ஜீதமிழ் தொலைக்காட்சியில் விஜய்யின் மெர்சல் படத்தை ஒளிப்பரப்பவுள்ளனர்.
இதனால், இந்த இரண்டு தொலைக்காட்சிகளுக்கும் கடுமையான TRP மோதல் இருக்கும், இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.