
தமிழ் சினிமாவில் இன்று மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கும் படம் என்றால் அது மெர்சல் என்று சொல்லாம் காரணம் அட்லி விஜய் கூட்டணி தான் இவர்களின் முதல் படம் மாபெரும் வெற்றி மட்டும் இல்லாமல் நூறு கோடிக்கு மேல் வசூலில் சாதனை விஜய் ரசிகர்களுக்கு என்ன வேண்டும் என்று தெரிந்து இருக்கும் அட்லி காரணம் அவரும் விஜய்யின் மிக தீவிர ரசிகர் இதை பற்றி அவர் சொன்ன ஒரு விஷயத்தை பார்க்கலாம் வாங்க .
‘தெறி’ படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய்யை இயக்கி வருகிறார் அட்லீ. மூன்று கேரக்டர்களில் விஜய் நடிக்கும் இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான், இந்தப் படத்துக்கு இசையமைக்க, ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அட்லீ, “இயக்குநராகப் பேச வேண்டுமானால், நான் கொஞ்சம் அடக்கி வாசித்தாக வேண்டும். நான் இயல்பிலேயே தளபதி ரசிகன். அவரை வைத்துப் படம் இயக்க வேண்டும் என்றுதான் சினிமாவுக்கு வந்தேன். விஜய்யை எப்படியெல்லாம் பார்க்க ஆசைப்படுகிறோமோ, அப்படி ஒரு படம் பண்ணும்போது என்னால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இயக்குநராக சில விஷயங்களைச் சொல்லக்கூடாது என தோன்றும். ஆனால், தளபதி ரசிகனாகப் பார்த்தால் சொல்லாமல் இருக்க முடியாது” என்று பேசியுள்ளார்.