Wednesday, April 30
Shadow

நாகேஷ் பேரன் வில்லனாக நடிக்கும் ” நான் யாரென்று நீ சொல் “

ஸ்ரீ மணிமேகலை கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக P.மணிமேகலை தயாரிக்கும் படத்திற்கு ” நான் யாரென்று நீ சொல்” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் கீர்த்திதரன் கதானாயகனாக நடிக்கிறார்.
கல்கண்டு படத்தில் நாயகனாக அறிமுகமானவர் கஜேஷ். நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமானா இவர் இப்படத்தில் இரண்டாவது நாயகனாக நெகடிவ் வேடத்தில் நடிக்கிறார். நாயகியாக சுரேகா அறிமுகமாகிறார்.
அம்மா வேடத்தில் சோனா நடிக்கிறார். மற்றும் ஆனந்த்பாபு பாண்டு கராத்தேராஜா மாறன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

எழுதி இயக்கி இருப்பவர் A.M.பாஸ்கர்இவர் ஏற்கெனவே பல படங்களை இயக்கி இருக்கிறார். இன்றைய பிரபல நடிகையான லஷ்மிராயை சினிமாவில் குறுக்கெழுத்து என்ற படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் இவர் தான்.
அவரிடம் நான் யாரென்று நீ சொல் படம் பற்றி கேட்டோம்…

சோனாவின் மகள் சுதா ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறாள். அதே நிறுவனத்தில் வேலை செய்யும் கஜேஷ் மற்றும் பேக்கரி தொழில் செய்யும் கீர்த்திதரன் இருவரும் அவளை காதலிக்க முயற்சிக்கிறார்கள். அதை தட்டிக்கேட்டு அவர்களை கண்டிக்கிறார் சோனா.அப்படி தட்டிக்கேட்ட அவர் இரண்டு நாட்களுக்குப் பிறகு கொலை செய்யப் படுகிறார். அவரை கொலை செய்தது யார் என்கிற கதை முடிச்சி தான் நான் யாரென்று நீ சொல் படத்தின் திரைக்கதை.கிரைம் திரில்லர் படமாக உருவாகி உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பொள்ளாச்சி கேரளா போன்ற இடங்களில் நடை பெற்றுள்ளது.

விரைவில் திரைக்கு வருகிறது படம் என்றார் இயக்குனர்.

Leave a Reply