Monday, August 10
Shadow

நல் இரவில் வட சென்னை ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்கும் தளபதி விஜய்

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் பல நடிகர்கள் வந்த பாதையை திரும்பி பார்ப்பதில்லை அதிலும் உச்சகட்டதுக்கு போன பின் ஏன் ரசிகர்களை கூட மறந்து விடுகிறார்கள் ரசிகர்களை சந்திப்பது கூட பெரிய விஷயமா உள்ளது ஆனால் இதற்க்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் என்று சொல்லலாம் விஜயை பொருத்தவரைக்கும் ரசிகர்கள் தான் அவரின் முத்த மூச்சாக நினைப்பவர் பொதுவாக பலர் ஓய்வு நேரங்களில் ரசிகர்களை பார்ப்பார்கள் ஆனால் இவர் மட்டும் எப்போது வேண்டுமானாலும் பார்ப்பார் .

 

தற்போது அட்லி இயக்கும் தனது 63வது படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். கால்பந்தாட்ட பயிற்சியாளராக விஜய் நடிக்கும் இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள பின்னிமில்லில் நடைபெற்றபோது, விஜய் படப்பிடிப்புக்கு வருவதை அறிந்து அங்கு ஏராளமான ரசிகர்கள் கூடினர். விஜய்யும் அவ்வப்போது ரசிகர்களை சந்தித்து வந்தார்.

இந்நிலையில், இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு, நேற்றுமுன்தினம் முதல் வட சென்னை, காசிமேடு கடற்பகுதியில் நடைபெற்று வருகிறது. நள்ளிரவு நேரங்களில் இங்கு படப்பிடிப்பு நடந்தபோதும், இதை அறிந்து ரசிகர்கள் அங்கும் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். என்றாலும் தேடி வரும் ரசிகர்களை ஏமாற்றக்கூடாது என்பதற்காக அவர்களை சந்தித்து வருகிறார் விஜய்.