Sunday, April 19
Shadow

அரசியலுக்கு விரைவில் வர திட்டமிடும் விஜய்

சமீப காலமாவே ரஜினி, கமல் உள்ளிட்ட பல நடிகர்கள் அரசியல் தொடர்பான கருத்துக்களை வெளியிட தொடங்கியிருக்காங்க. அந்த வகையில் விஜய் தொடர்ந்து சமீபகாலமாக அரசியலை பற்றி விமர்சனம் பண்ணுகிறார்.

அவங்களோட சேரும் விதமா நடிகர் விஜய்யும் அரசியல் தொடர்பான தன்னோட கருத்துக்களை சொல்லியிருக்காரு.

சமீபத்துல நடந்த ஒரு விருது விழாவுல பேசியிருக்கற அவரு, நாம நல்லா இருக்கோம். ஆனா நமக்கு சோறு போடுற விவசாயி நல்லா இல்லைனு சொல்லியிருக்காரு.

வல்லரசு நாடா அப்பறம் மாறலாம், முதல்ல விவசாயிகளுக்கு ஒரு நல்லரசு நாடா மாறனும்னும் விஜய் பேசியிருக்காரு. ஏற்கனவே மத்திய அரசோட பணமதிப்பு நீக்கத்தை கண்டிச்சு நடிகர் விஜய் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.விஜய் ஏற்கனவே மக்கள் இயக்கம் என்று ஒரு இயக்கத்தை ரகசியமாக நடத்திவருபது பலருக்கு தெரியம்.அனேகமாக வரும் தேர்தலில் விஜய் மற்றும் ரஜினிகாந்த் இவர்களின் பங்கும் இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Leave a Reply