Saturday, October 10
Shadow

அக்டோபர் 1 முதல் திரையரங்குகளில் ‘பத்தா’ – விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணியில் மீண்டும் ஒரு வித்தியாசமான பயணம்

அக்டோபர் 1 முதல் திரையரங்குகளில் ‘பத்தா’ – விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணியில் மீண்டும் ஒரு வித்தியாசமான பயணம்

தமிழ் சினிமாவில் கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் தனக்கென ஒரு பாதையை உருவாக்கி வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தற்போது ‘பத்தா’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை சந்திக்கத் தயாராகியுள்ளார். இயக்குநர் அட்லி வழங்கும் இப்படம் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

‘பத்தா’ திரைப்படத்தின் மீது கவனம் குவிய முக்கிய காரணங்களில் ஒன்று, விஜய் சேதுபதி – இயக்குநர் பாலாஜி தரணிதரன் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதுதான். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் உருவான ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சீதக்காதி’ ஆகிய இரு படங்களும் வழக்கமான கதைக்களத்திலிருந்து விலகி தனித்துவமான திரை அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கியிருந்தன.

அந்த வரிசையில் மூன்றாவது முறையாக இருவரும் இணைந்துள்ள ‘பத்தா’, இந்த கூட்டணியின் அடுத்த கட்டமாக பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதியின் இயல்பான நடிப்பும், பாலாஜி தரணிதரனின் வித்தியாசமான கதை சொல்லும் பாணியும் இணைவதால், படத்தின் உள்ளடக்கம் குறித்த எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகரித்துள்ளது.

மீண்டும் இணையும் அட்லி – விஜய் சேதுபதி கூட்டணி

‘பத்தா’ படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கு மற்றொரு முக்கிய காரணம் இயக்குநர் அட்லியின் பங்களிப்பு. அட்லி இயக்கிய ‘ஜவான்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கூட்டணிக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது அட்லி வழங்கும் படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார்.

இதனால் ‘ஜவான்’ படத்தில் இணைந்த இருவரின் கூட்டணி, ‘பத்தா’ மூலம் எந்த மாதிரியான புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கப் போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வலுவான தொழில்நுட்பக் கூட்டணி

‘ஜெய் பீம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற லிஜோமோல் ஜோஸ், இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இன்றைய தலைமுறை ரசிகர்களிடம் தனது இசையின் மூலம் கவனம் ஈர்த்து வரும் சாய் அப்யங்கர் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

செல்வகுமார் SK ஒளிப்பதிவையும், ஆர். கலைவாணன் படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர். தயாரிப்பு வடிவமைப்பை டி. முத்துராஜ் மேற்கொள்ள, அஷ்வின் முருகன் இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

முராத் கெதானி, பிரியா அட்லி, அலோக் ஜெயின் மற்றும் அஜித் அந்தாரே ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். Star Studio18 மற்றும் இயக்குநர் அட்லி வழங்கும் இப்படத்தை A for Apple Studios மற்றும் Cine1 Studios Production இணைந்து தயாரித்துள்ளன.

நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் பாலாஜி தரணிதரன் மற்றும் அட்லி என எதிர்பார்ப்பை உருவாக்கும் பல்வேறு திரைப்பிரபலங்களின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘பத்தா’, அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. விஜய் சேதுபதி – பாலாஜி தரணிதரன் கூட்டணியின் மூன்றாவது படைப்பு ரசிகர்களுக்கு எந்த மாதிரியான அனுபவத்தை தரப்போகிறது என்பதற்கு அக்டோபர் 1 பதில் சொல்லும்.

Vijay Sethupathi and Balaji Tharaneetharan Reunite for ‘Baththa’; Atlee Presents the Film for Worldwide Release on October 1

Makkal Selvan Vijay Sethupathi, known for his distinctive choice of films and versatile performances, is all set to meet audiences with his upcoming film ‘Baththa’. Presented by filmmaker Atlee, the film is scheduled for a worldwide theatrical release on October 1.

One of the major reasons behind the growing anticipation for ‘Baththa’ is the reunion of Vijay Sethupathi and director Balaji Tharaneetharan. The duo has previously collaborated on ‘Naduvula Konjam Pakkatha Kaanom’ and ‘Seethakathi’, two films that earned appreciation for their unconventional storytelling and distinctive cinematic treatment.

With ‘Baththa’ marking their third collaboration, expectations are naturally high. Vijay Sethupathi’s effortless and natural acting, combined with Balaji Tharaneetharan’s unique approach to storytelling, is expected to bring yet another different cinematic experience to audiences.

Atlee and Vijay Sethupathi Team Up Again

Another major highlight of ‘Baththa’ is the reunion of filmmaker Atlee and Vijay Sethupathi. The two had earlier shared screen space in the pan-India blockbuster ‘Jawan’, where Vijay Sethupathi played a pivotal role.

Following the success and attention generated by their earlier association, the duo has now come together once again, with Vijay Sethupathi playing the lead in ‘Baththa’, presented by Atlee. This has added another layer of anticipation among audiences eager to see what this new collaboration has to offer.

Strong Technical Team Behind the Film

Lijomol Jose, who earned widespread recognition for her performance in ‘Jai Bhim’, plays the female lead in the film.

The music for ‘Baththa’ has been composed by Sai Abhyankkar, one of the young music composers who has quickly captured the attention of the current generation. Selvakumar SK handles the cinematography, while R. Kalaivanan is the editor. Production design is by T. Muthuraj, with Ashwin Murugan serving as Co-Producer.

The film is produced by Murad Khetani, Priya Atlee, Alok Jain and Ajit Andhare. Presented by Star Studio18 and filmmaker Atlee, ‘Baththa’ is jointly produced by A for Apple Studios and Cine1 Studios Production.

Bringing together the much-loved combination of Vijay Sethupathi and Balaji Tharaneetharan, along with Atlee’s association and a strong technical team, ‘Baththa’ is gearing up for a worldwide theatrical release on October 1.

With the third collaboration between Vijay Sethupathi and Balaji Tharaneetharan promising another distinctive cinematic experience, all eyes are now on ‘Baththa’ as it prepares to arrive in theatres worldwide.