Saturday, October 10
Shadow

Tag: Sai Abhyankkar Baththa

“விஜய் சேதுபதி படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான்… அவருடன் பணியாற்றியது மிகவும் சிறப்பு!” – ‘பத்தா’ வெற்றி குறித்து சாய் அப்யங்கர் நெகிழ்ச்சி

“விஜய் சேதுபதி படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான்… அவருடன் பணியாற்றியது மிகவும் சிறப்பு!” – ‘பத்தா’ வெற்றி குறித்து சாய் அப்யங்கர் நெகிழ்ச்சி

Shooting Spot News & Gallerys
“விஜய் சேதுபதி படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான்… அவருடன் பணியாற்றியது மிகவும் சிறப்பு!” – ‘பத்தா’ வெற்றி குறித்து சாய் அப்யங்கர் நெகிழ்ச்சி ‘பத்தா’ திரைப்படத்தின் வெற்றி இசையமைப்பாளர் சாய் அப்யங்கருக்கு கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், படத்தின் வெற்றிக்கு காரணமான ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். படத்தை பாலாஜி சாருடன் இணைந்து முதன்முறையாகப் பார்த்தபோது, மிகவும் வியந்து போனதாகக் கூறிய சாய் அப்யங்கர், படத்தில் கதாநாயகர்கள் மட்டுமின்றி சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் கூட மிகச் சிறப்பான நடிப்பை வழங்கியிருப்பதாக பாராட்டினார். மேலும், தன் மீது நம்பிக்கை வைத்து ‘பத்தா’ படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை வழங்கிய அட்லீ அண்ணாவுக்கு நன்றி தெரிவித்தார். ஆரம்பத்தில் தனது இசையின் மீது நம்பிக்கை வைத்த பாலாஜி சார்,...
பத்தா – திரைவிமர்சனம் (Rank 3.5/ 5)

பத்தா – திரைவிமர்சனம் (Rank 3.5/ 5)

Latest News, Review
பத்தா – தாதாவின் வாழ்க்கையை புரட்டிப் போடும் ஒரு எதிர்பாராத பந்தம்! விஜய் சேதுபதியின் வித்தியாசமான கேங்ஸ்டர் அவதாரம் – ‘பத்தா’ எப்படி? 1980-களின் மெட்ராஸ் நகரத்தை மீண்டும் கண்முன் கொண்டு வந்து, வழக்கமான கேங்ஸ்டர் படங்களிலிருந்து சற்று விலகி பயணிக்கிறது பாலாஜி தரணீதரன் இயக்கியுள்ள ‘பத்தா’. விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் இப்படம், ஆக்‌ஷன் மற்றும் ரவுடியிசத்தை மட்டுமே முன்னிறுத்தாமல், ஒரு முரட்டுத்தனமான மனிதனுக்குள் இருக்கும் பாசத்தையும் மனிதநேயத்தையும் பேச முயற்சிக்கிறது. ஒரு கழிவறைக்குள் தொடங்கும் கதை! 1986-ம் ஆண்டு மெட்ராஸ். அந்தப் பகுதியில் அனைவரும் பயப்படும் உள்ளூர் தாதா பத்தா. எதிர்பாராத ஒரு சூழலில் பள்ளி வளாகத்தில் பயன்படுத்தப்படாமல் கிடக்கும் கழிவறைக்குள் சிக்கிக்கொள்ளும் அவர், அங்கிருந்து வெளியே வருவதற்காக ஒரு சிறுவனின் உதவியை நாட வேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்த...
அக்டோபர் 1 முதல் திரையரங்குகளில் ‘பத்தா’ – விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணியில் மீண்டும் ஒரு வித்தியாசமான பயணம்

அக்டோபர் 1 முதல் திரையரங்குகளில் ‘பத்தா’ – விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணியில் மீண்டும் ஒரு வித்தியாசமான பயணம்

Latest News, Top Highlights
அக்டோபர் 1 முதல் திரையரங்குகளில் ‘பத்தா’ – விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணியில் மீண்டும் ஒரு வித்தியாசமான பயணம் தமிழ் சினிமாவில் கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் தனக்கென ஒரு பாதையை உருவாக்கி வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தற்போது ‘பத்தா’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை சந்திக்கத் தயாராகியுள்ளார். இயக்குநர் அட்லி வழங்கும் இப்படம் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘பத்தா’ திரைப்படத்தின் மீது கவனம் குவிய முக்கிய காரணங்களில் ஒன்று, விஜய் சேதுபதி – இயக்குநர் பாலாஜி தரணிதரன் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதுதான். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் உருவான ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சீதக்காதி’ ஆகிய இரு படங்களும் வழக்கமான கதைக்களத்திலிருந்து விலகி தனித்துவமான திரை அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கியிருந்தன. அந்த வரிசையில் மூன்றாவது முறையாக இருவரும் இணைந்துள்ள ‘பத...