Thursday, April 18
Shadow

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் தம்பியாக நடிக்கும் பிரபல நடிகர்

ரஜினி நடிப்பில் ‘காலா’ படம் வருகிற ஏப்ரல் 27-ந் தேதி வெளியாகிறது. ரஜினி அடுத்ததாக, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் மூலம் ரஜினி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு அனிருத்துக்கு கிடைத்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்குள் ரஜினி தனது அரசியல் பணிகளை ஓரளவு முடித்துவிட திட்டமிட்டிருக்கிறாராம்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக முன்னதாக தகவல் வெளியாகி இருந்தது. ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘பீட்சா’, ‘இறைவி’ படங்களில் விஜய்சேதுபதி நடித்திருக்கிறார். எனவே, ரஜினி நடிக்கும் இந்த படத்திலும் விஜய்சேதுபதி நடிக்கிறார் என்று செய்தி வெளியாகியது விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கலாம் என்றும் தகவல் வெளியானது.

இந்நிலையில், ரஜினியின் தம்பியாக விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக புதிய தகவல் பரவி வருகிறது. உண்மையாகவே, விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்கிறாரா? இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சாதாரணமாக ரஜினி படத்தில் இருக்கும் அனைத்து அம்சங்களும் இந்த படத்திலும் இருக்கும் என்று கார்த்திக் சுப்புராஜ் கூறியிருக்கிறார்.