Friday, April 19
Shadow

விஜய் சேதுபதி நடிக்கும் சங்க தமிழன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

நடிகர் விஜய் சேதுபதி தற்போது நடித்து வரும் படம் சங்கத் தமிழன். இந்த படம் தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியாகும் என்று படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். இதே தீபாவளி பண்டிகையை ஒட்டி நடிகர் விஜய் நடிக்கும் பிகில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கெட்ச் புகழ் இயக்குனர் விஜய் சந்தர் இயக்கம் இந்த படத்தின் சூட்டிங் ஹைதராபாத் உள்ள ராமோஜி பிலிம் சிட்டி மற்றும் குற்றாலம் பகுதிகளில் நடைபெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக இந்த படத்தின் படக்குழுவினர் சென்னை வந்தடைந்துள்ளனர். நிவேதா பெத்ராஜ் மற்றும் ராஷி கன்னா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.