Friday, April 19
Shadow

முன்னணி மலையாள நடிகருடன் இணையும் விஜய் சேதுபதி

தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் வெளியாக உள்ள புதிய படம் ஒன்றில் முன்னணி மலையாள நடிகரான மம்முட்டியுடன் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க கையெழுத்திட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடன் இணைய உள்ளனர்.

இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் திரையுலகில் மிகவும் பிசியாக இருந்து வரும் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இருவரும், இந்த படத்தில் நடிகர் மம்முட்டி முக்கிய வேடத்தில் நடிப்பதை அறிந்து, இப்படத்தில் நடிக்க ஒப்பு கொண்டுள்ளதாகவும் நம்ப தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.