Tuesday, November 29
Shadow

10 வருட காலம் எந்த வித பிரச்சனை இல்லாமல் வெளிவந்தது விக்ரம் படம் தான் – கமல்

 

கடந்த 10 வருட காலத்தில் நான் நடித்த படம் பிரச்சனை இல்லாமல் வெளி வந்த முதல் படம் விக்ரம் தான் என்று நடிகர் கமல்ஹாசன் விக்ரம் திரைப்பட வெற்றி விழாவில் தெரிவித்து உள்ளார்*

சென்னை கிண்டியில் அமைந்துள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி நடிகர் கமல் நடித்து வெளியாகிய விக்ரம் திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தயாரிப்பாளர் அன்புச்செழியன், இசையமைப்பாளர் அனிருத், மேலும் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்..

அப்பொழுது மேடையில் பேசிய இசையமைப்பாளர் அனிருத் :

விக்ரம் படத்தை பிரம்மாண்டமாக மாற்றிய மக்களுக்கு நன்றி

உங்களுக்கு என்ன கமல் பரிசு கொடுத்தார் என்று நிறைய பேர் கேட்டனர். விக்ரம் படமே எனக்கு பெரிய பரிசு வேறு எந்த பரிசும் தேவை இல்லை என்றேன்..

உதயநிதி மேடை பேச்சு :

இந்த படத்தை கமல் எனக்கு முதலில் காண்பித்தார்.இடைவேளி முடிந்த பின்பு நான் ஆச்சரியமாக உணர்ந்தேன். என்னுடைய வாழ்த்தையும் தெரிவித்தேன்..

இந்த திரைப்படத்தின் முதல் விமர்சகர் நான் தான் என்பதில் பெருமையாக உள்ளது..

படம் வெற்றி பெறும் என்று நினைத்தேன் ஆனால் இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்க வில்லை..

விக்ரம் திரைப்படத்தை 7 முறை பார்த்துவிட்டேன். விக்ரம் திரைப்படம் தமிழ்நாடு ஷேர் மட்டும் 75 கோடி கிடைத்துள்ளது. இதுவரை எந்த படமும் இந்த அளவிற்கு கிடைக்கவில்லை.

படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் பேசிய போது, இந்த ரயிலில் கடைசியாக ஏறிய பயணி நான் என சொன்னேன்.நான் ஏறியது ரயில் இல்லை, ராக்கெட் விக்ரம் படம் ஒரு ராக்கெட்..

இயக்குனர் லோகேஷ் மேடை பேச்சு :

ஊரடங்குக்கு தான் நன்றி சொல்ல வேண்டும், இந்த படத்தை பொறுமையாக எழுத நேரம் கிடைத்தது..வேலையை பகிர்ந்து செய்துக்கொண்டு இருந்தோம்.. கமல் சார் பங்கு இல்லை என்றால் வெற்றி சாத்தியம் இல்லை.

கமல் சார் எனக்கு கொடுத்த மிகப்பெரிய அறிவுரை என்னவென்றால், படம் வெளியான உடன் செல்போனில் அழைத்து அரை மணி நேரம் பேசினார். படம் வெற்றி பெற்று விட்டது, இனி உடனடியாக அடுத்த படத்திற்கான வேலைகளை பாருங்கள் என அறிவுறுத்தினார்..

கமல்ஹாசன் மேடை பேச்சு :

எனக்கு வேலை கிடைக்க வேண்டும் என தான் சினிமாவிற்கு வந்தேன், பாலச்சந்திரன் சார் தான் என்னை நடிக்க வைத்தவர்..எனக்கு வெற்றிகளை தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் என் ரசிகர்கள் கொடுத்துள்ளார்கள்..

இந்த படத்திற்கு மகேந்திரன், தம்பி உதயநிதி ஆகியோர் இருப்பது தைரியமாக இருந்தது.. நான் சின்னத்திரைக்கு சென்ற போது என்னிடம் சின்னத்திரை செல்ல வேண்டாம் என சொன்னார்கள், அப்போது நான் சின்னத்திரை கொஞ்சம் சூதாரித்துக்கொண்டேன்

நான் தொலைக்காட்சி வாயிலாக தான் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றுள்ளேன்..நான் இப்படியே உட்கார மாட்டேன், இனி ஒவ்வொரு படமும் இருக்கையின் நுனியில் அமர வைக்க உழைப்பேன்.எனக்கு உழைக்கும் தமிழக மக்கள் அவர்களின் ஒரு பங்கை கொடுத்துள்ளார்கள். நாங்கள் குளிக்கும் குளம், கலையுலகம்!

என் திறமைக்கு அதிகமாக தமிழக மக்கள் என்னை தூக்கி பிடித்துள்ளார்கள்

என்னை விட திறமையானவர்கள் என்னை மாதிரியான குருமார்கள் இந்த துறையை விட்டு போய் இருக்கிறார்கள்.. லோகேஷ் நீங்கள் பிறருக்கு கத்து கொடுங்கள்

இந்த அனிருத் தம்பியை என்ன சொல்வது என தெரியவில்லை, யாராவது தனியாக பார்த்தால் ஏம்பா கல்லூரி போகலயா? என கேட்பது போல உள்ளார்.ஆனால் எழுந்து நின்று பேசினார் அமிதாப் பச்சன் குரல் போல இருக்கும்

பணத்திற்காக ஓடாமல், பணமும் வேண்டும் ஆனால் நான் ஒரு நல்ல படம் செய்து விட்டு அதன் மூலம் நன்றாக சம்பதிப்போம் என உழைத்த நல்ல உழைப்பாளிகள். உதயநிதி இதனை தொடர்ந்து செய்யுங்கள்,

அடுத்த படத்தை நீங்கள் எடுக்கும் போது, அதற்கு நாங்கள் போட்டி போட மாட்டோம்

மாறாக அதற்கும் துணையாக நிற்போம். ஆரோக்கியமான விமர்சனங்களையும், எங்களை தட்டி கொடுத்த பத்திரிக்கையாளர்களுக்கு நாங்கள் நன்றி சொல்ல வேண்டும்..
சும்மா கேலி செய்தவர்கள் விமர்சனத்தை, நாலு பேர் அப்படி தான் சொல்வார்கள், அவர்களுக்கு பிடித்தால் பிடித்திருக்கிறது என சொல்வார்கள்

என் படத்திற்கு மட்டும் இப்படி வரவேற்பு அளிப்பதை தாண்டி மற்ற படங்களுக்கும் ஆதரவு அளியுங்கள்
படத்தின் விநியோகஸ்தர்கள் மிகுந்த சந்தோசத்தில் இருந்தனர்

நான் படத்திற்கு சென்றால் படத்தை மற்றவர்கள் சரியாக பார்க்க மாட்டார்கள் என பல பேரை வேவு பார்க்க அனுப்பினேன். உண்மையாக சொல்கிறேன், திரையரங்கில் பாப்கார்ன் விற்பவர் முதல் பார்க்கிங்கில் சைக்கிள் பார்த்துக் கொள்பவர் வரை இந்த படம் வெளியான திரையரங்குகளில் மகிழ்ச்சியாக வேலை பார்க்க வைத்து இருக்கிறது விக்ரம் படம்..

10 வருட காலத்தில் நான் நடித்த படம் பிரச்சனை இல்லாமல் வெளி வந்த படம் விக்ரம் தான்

உதயநிதியை பற்றி அவர் அப்பாவிடம் புகழ்ந்து கூற வேண்டும்.இவரை போல நேர்மையுடன் தயாரிப்பாளர் வேண்டும்..
தொடர்ந்து நாம் ஆரோக்கியமான திரை உலகை செய்ய வேண்டும்.. நாம் அதற்காக சேர்ந்து வேலை செய்வோம்

இடம் : கிண்டி