
விக்ரம் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகர் மாட்டும் இல்லாமல் ஒரு சிறந்த நடிகரும் என்று நாம் அறிந்த விஷயம் நேற்று தான் இவரின் சாமி 2 படத்தின் பூஜை மற்றும் படபிடிப்பு ஆரம்பம் ஆனது இந்த படத்தின் ஸ்டில்ஸ் பார்த்து இன்னும் இளமையுடன் இருக்கும் விக்ரம் என்று அனைவரும்கூறினார்கள்.
இன்று அவர் மகன் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகம் என்று ஒரு செய்தி நம்பமுடியவில்லை ஆனால் நம்பித்தான் ஆகணும் அதுவும் பலர் போட்டி போட்ட ஒரு கதைக்கு அது என்ன படம் தெரியுமா
சந்தீப் ரெட்டி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்த படம் அர்ஜீன் ரெட்டி.
தெலுங்கில் ரூ. 4 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆனது.
எவரும் எதிர்பாராத வகையில் கிட்டதட்ட 10 மடங்கு லாபத்தை இப்படம் பெற்றதால் இதன் ரீமேக் உரிமைக்கு பலத்த போட்டி உருவானது.
இந்நிலையில் இ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இதன் தமிழ், மலையாள மற்றும் கன்னட டப்பிங் மற்றும் ரீமேக் உரிமைகளை பெற்றது என்பதை பார்த்தோம்.
இந்நிலையில் இதன் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் அவர்களின் மகன் துருவ் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இவர் அறிமுகமாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது