Monday, August 24
Shadow

‘குறிஞ்சி மலை மேல’ பாடலுக்கு 15 லட்சம் பார்வைகள் – எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘சிட்டுக்குறிஞ்சி’!

‘குறிஞ்சி மலை மேல’ பாடலுக்கு 15 லட்சம் பார்வைகள் – எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘சிட்டுக்குறிஞ்சி’!

தமிழ் திரையுலகில் காதல், நகைச்சுவை மற்றும் ஃபேண்டஸியை வித்தியாசமான கதைக்களத்துடன் இணைத்து உருவாகி வரும் திரைப்படம் ‘சிட்டுக்குறிஞ்சி’. இப்படத்தின் முதல் பாடலான ‘குறிஞ்சி மலை மேல’ பாடல் யூடியூபில் 15 லட்சம் பார்வைகளை கடந்து, ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

திருமணக் கொண்டாட்டத்தின் உற்சாகத்தை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடலை நடிகையும் பாடகியுமான ரம்யா நம்பீசன் பாடியுள்ளார். கு. கார்த்திக் பாடல் வரிகளை எழுத, அறிமுக இசையமைப்பாளர் மாறா இசையமைத்துள்ளார். வெளியான குறுகிய காலத்திலேயே பாடல் அதிகளவில் ரசிக்கப்பட்டிருப்பது, படத்தின் இசை மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

1983-ம் ஆண்டை கண்முன் கொண்டு வரும் ‘சிட்டுக்குறிஞ்சி’

‘சிட்டுக்குறிஞ்சி’ படத்தின் கதைக்களம் மட்டுமல்லாமல், அதன் காட்சியமைப்பும் படத்தின் முக்கிய பலமாக இருக்கும் என படக்குழு தெரிவிக்கிறது. 1983-ம் ஆண்டை பின்னணியாகக் கொண்ட இப்படத்திற்காக, அந்தக் காலகட்டத்தின் வாழ்க்கை முறை மற்றும் கிராமியச் சூழலை இயல்பாகக் கொண்டுவரும் வகையில் கொடைக்கானல் பள்ளங்கி மலைப்பகுதியில் சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான கிராமத்து செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

காதல், நகைச்சுவை மற்றும் ஃபேண்டஸி ஆகிய மூன்று அம்சங்களையும் ஒன்றாகக் கலந்து உருவாகியுள்ள இப்படம் வழக்கமான காதல் திரைப்படங்களிலிருந்து மாறுபட்ட அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

முடிவை நெருங்கியுள்ள ‘சிட்டுக்குறிஞ்சி’

அறிமுக இயக்குநர் வீஜெ மீனாட்சி சுந்தரம் எழுதி இயக்கியுள்ள இப்படத்தின் டப்பிங் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தில் ரஜித் மேனன் கதாநாயகனாக நடிக்கிறார். தீப்ஷிகா, நக்ஷா சரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீராம் கார்த்திக் சிறப்பு தோற்றத்தில் இடம்பெற்றுள்ளார். இவர்களுடன் வீ.ஜே. பப்பு, ஜி.எம். குமார், எல்.வி. ஆதவன், ராம்ஸ், ஹலோ கந்தசாமி, தேனி முருகன், சுஜாதா, கராத்தே ராஜா, ஈஸ்வர்பாபு, மஞ்சு, அட்வகேட் பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

புடாபெஸ்டில் உருவான பின்னணி இசை

படத்தின் இசை அனுபவத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், பின்னணி இசைக்கான பதிவுகள் ஹங்கேரியின் புடாபெஸ்டில் உள்ள Budapest Scoring Company ஸ்டுடியோவில் லைவ் ஆர்கெஸ்ட்ரா இசைக்கலைஞர்களின் பங்களிப்புடன் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இப்படத்தின் மூலம் மாறா இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பிரான்சிஸ் ராஜ்குமார் ஆ. ஒளிப்பதிவை மேற்கொள்ள, மகேந்திரன் கணேசன் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். ராம்ஜி கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

பிளாக் அண்ட் ஒய்ட் மீடியா சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் டி. ஜூட் ஆனந்த் தயாரிக்கும் இப்படத்திற்கு ராஜேஷ் ஆர்., டாக்டர் கே. எஸ். செந்தில் (சசிராம் பிக்சர்ஸ்), கடையநேந்தல் ஆர். ஏ. பீட்டர் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக உள்ளனர்.

‘குறிஞ்சி மலை மேல’ பாடலுக்கு கிடைத்துள்ள 15 லட்சம் பார்வைகள், ‘சிட்டுக்குறிஞ்சி’ படத்தின் மீதான ரசிகர்களின் ஆரம்பகட்ட ஆர்வத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. பாடலின் வரவேற்பைத் தொடர்ந்து, படத்தின் இசை மற்றும் வித்தியாசமான கதைக்களம் திரையரங்க அனுபவத்தில் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீடு தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளன.

தொழில்நுட்பக் குழு

எழுத்து & இயக்கம்: வீஜெ மீனாட்சி சுந்தரம்
தயாரிப்பு: டி. ஜூட் ஆனந்த்
இசை: மாறா
ஒளிப்பதிவு: பிரான்சிஸ் ராஜ்குமார் ஆ.
படத்தொகுப்பு: மகேந்திரன் கணேசன்
கலை இயக்கம்: ராம்ஜி
நடனம்: தீனா
ஒலி வடிவமைப்பு: டோனி ஜே
SFX: கிஷோர் காமராஜ்
VFX: ஜீவரத்தினம் ஆர்.
ஆடை வடிவமைப்பு: ஹரிவர்தனி
காஸ்ட்யூமர்: எஸ்.பி. சுகுமார்
மேக்கப்: வேல்முருகன்
விளம்பர வடிவமைப்பு: தமிழ்ச்செழியன்
எக்ஸிகியூட்டிவ் புரொட்யூசர்: என். குழந்தைவேலு (மஞ்சு சினி எக்யூப்மென்ட்ஸ்)
மக்கள் தொடர்பு: ரியாஸ் K. அஹ்மத், பாரஸ் ரியாஸ்
டிஜிட்டல் மார்க்கெட்டிங்: ஏ.எஸ். பக்தீஸ்வரன், ஆர்.ஜெ. முகமது ரஃபி மீரான், ஸ்ரீநிதி பக்தீஸ்வரன்
ஆடியோ உரிமை: Saregama India Ltd. (RPSG Group)

 

‘Kurinji Malai Mela’ Crosses 1.5 Million Views, Boosting Expectations for ‘Chittukurinji’!

The upcoming Tamil feel-good romantic classic ‘Chittukurinji’, which blends romance, comedy and fantasy in a unique setting, is already generating curiosity among moviegoers. The film’s first single, ‘Kurinji Malai Mela’, has crossed 1.5 million views on YouTube and is receiving a positive response from music lovers.

Featuring the festive spirit of a wedding celebration, the song has been sung by actress and playback singer Ramya Nambeesan. The lyrics have been penned by Ku. Karthik, while debutant composer Maara has scored the music. The song’s impressive response has added further anticipation surrounding the film’s music.

‘Chittukurinji’ Takes Audiences Back to 1983

One of the major highlights of Chittukurinji is its period setting. Set against the backdrop of 1983, the film has made extensive efforts to recreate the lifestyle and atmosphere of that era.

For the shoot, a massive village set was constructed across nearly 80 acres in the Pallangi Hills region of Kodaikanal. The elaborate set was designed to authentically capture the visual atmosphere and rural lifestyle of the period.

Written and directed by debutant filmmaker VJ Meenakshi Sundaram, Chittukurinji combines romance, comedy and fantasy to offer audiences a distinctive cinematic experience.

Post-Production Nears Completion

The dubbing work for the film has been completed, while the team is currently engaged in the final stages of post-production. The official announcement regarding the film’s worldwide theatrical release date is expected soon.

Rajith Menon plays the lead role, while Deepshikha and Naksha Saran appear in important roles. Sreeram Karthik makes a special appearance. The film also features V.J. Pappu, G.M. Kumar, L.V. Aadhavan, Rams, Hello Kandasamy, Theni Murugan, Sujatha, Karate Raja, Easwar Babu, Manju and Advocate Babu among others.

Live Orchestra Recording in Budapest

Adding to the film’s musical appeal, the background score has been recorded with a live orchestra at the Budapest Scoring Company studio in Budapest, Hungary, featuring internationally acclaimed musicians.

Chittukurinji marks Maara’s debut as a music composer. Francis Rajkumar A handles the cinematography, while Mahendran Ganesan is responsible for the editing. Ramji serves as the art director.

Produced by T. Jude Anand under Black and White Media Solutions Private Limited, the film has Rajesh R., Dr. K.S. Senthil of Sasiram Pictures and Kadaiyanenthal R.A. Peter as co-producers.

Technical Crew

Written & Directed by: VJ Meenakshi Sundaram
Producer: T. Jude Anand
Music: Maara
Cinematography: Francis Rajkumar A.
Editing: Mahendran Ganesan
Art Direction: Ramji
Choreography: Dheena
Sound Design: Tony J
SFX: Kishore Kamaraj
VFX: Jeevarathinam R.
Costume Designer: Harivardhani
Costumer: S.P. Sukumar
Make-up: Velmurugan
Publicity Design: Tamilselvan
Executive Producer: N. Kuzhandaivelu (Manju Cine Equipments)
PRO: Riyas K. Ahamed, Paras Riyas
Digital Marketing: A.S. Baktheeswaran, R.J. Mohammed Rafi Meeran, Srinidhi Baktheeswaran
Audio Rights: Saregama India Ltd. (RPSG Group)

With ‘Kurinji Malai Mela’ crossing 1.5 million views, the song’s reception has strengthened the early buzz surrounding Chittukurinji. The film’s distinctive storyline, period backdrop and musical presentation are expected to further heighten curiosity among audiences.

The makers are expected to announce further details regarding the worldwide theatrical release of ‘Chittukurinji’ soon.