Tuesday, February 11
Shadow

விக்ரம் மகனுக்கு ஜோடியாகிறாரா கமல் மகள்?

இன்றும் இளைஞர்போல காட்சி அளிக்கும் விக்கி மகன் ஹீரோ என்றால் பலர் வாயை பிளக்கிறார்கள் ஆம் உண்மை விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக தமிழ் சினிமாவில் களம் இறங்குகிறார் விக்ரமுக்கு தமிழ் சினிமாவில் ஒரு அங்கிகாரம் கொடுத்த பாலா தான் இவரின் மகன் முதல் படத்தை இயக்கயுள்ளார். இது தெரிந்ந்த சேதி தெரியாத செய்தி வாங்க பாக்கலாம்

தெலுங்கு சினிமாவில் அண்மையில் வெளியாகி இளைஞர்களின் மனம் கவர்ந்த ஒரு படம் அர்ஜுன் ரெட்டி.இப்படத்தின் ரீமேக்கின் மூலம் நடிகர் விக்ரமின் மகன் துருவ் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் நாயகியாக கமல்ஹாசன் மகள் அக்ஷாரா ஹாசன் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், சூர்யா, ஜோதிகா நடித்த சில்லுனு ஒரு காதல் படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்த ஷ்ரியா ஷர்மாவிடமும் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம்.

இதனால் விக்ரம் மகனுக்கு ஜோடி கமல் மகளா, ஷ்ரியா ஷர்மாவா அல்லது வேறொரு நடிகையா என்பதை படக்குழு விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a Reply