
களவாணி 2 வெற்றியை தொடர்ந்து மேலும் ஒரு படத்தில் விமல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், விமல் தயாரிப்பாளர்கள் நடிகர் என்று சொல்லலாம் குறைந்த செலவில் எடுக்கப்பட்டு அதிக லாபம் கொடுக்கும் ஒரு ஹீரோ என்று சொன்னால் மிகையாகது .ஆம் யாவரின் படங்கள் குறைந்த செலவில் எடுக்க படும் படங்கள் அனால் இவரின் படங்கள் தயாரிப்பளர் கை கடிப்பதில்லை ஆகவே இவருக்கு தயாரிப்பளர்கள் மத்தியில் ஒரு டிமாண்ட் இருக்கு
தற்போது இவர் நடிக்கும் படத்துக்கு “சோழ நாட்டான்” என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குனர் பட்டுக்கோட்டை “ரஞ்சித் கண்ணா” இயக்குகிறார் ,மரகதகாடு படத்தின் ஒளிப்பதிவாளர் “நட்சத்திர பிரகாஷ்” ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்கள் “மணிஅமுதவன்”மற்றும் “சபரீஷ்” எழுதுகிறார்கள். ஹரிஷ் பிலிம் புரோடக்ஷன் சார்பாக “பாரிவள்ளல்” தயாரிக்கும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் மற்றும் முன்னணி நாயகி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது விரைவில் அதை படக்குழு அறிவிக்கவுள்ளது.
