Thursday, April 18
Shadow

வினோதய சித்தம் திரை விமர்சனம் (ரேட்டிங் 5/5)

இயக்குநர் சமுத்திரக்கனி எழுதி இயக்கி நடித்திருக்கும் வினோதய சித்தம் படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.
தம்பி ராமையாவுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவருடைய மகன் தீபக் வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறார். தம்பி ராமையா தான் வேலை பார்க்கும் இடத்தில் பதவி உயர்வு பெறுவதில் முனைப்புடன் இருக்கிறார். தனக்குப் பதவி கிடைத்துவிடும் என்ற மகிழ்ச்சியில் வாகனத்தில் பயணம் செய்கிறார். அப்போது திடீரென ஏற்பட்ட விபத்தில் இறந்துவிடுகிறார்.
தம்பி ராமையாவின் ஆன்மா சமுத்திரக்கனியைச் சந்திக்கிறது. தனது இரண்டு மகளுக்கும் திருமணம் செய்து வைக்கவேண்டும். குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். எனவே தன்னை விட்டுவிடுமாறு தம்பி ராமையா சமுத்திரக்கனியிடம் கெஞ்சுகிறார். அதற்கு சமுத்திரக்கனி 90 நாட்கள் மட்டும் கால அவகாசம் தருகிறார்.
தம்பி ராமையாவுக்கு துணையாக சமுத்திரக்கனியும் செல்கிறார். அந்த 90 நாட்களில் தம்பி ராமையா சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? 90 நாட்களுக்கு பிறகு அவரது உயிர் பிரிந்ததா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.
வாழ்க்கையில் எல்லாம் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டுள்ளது, மற்றவர்களுடன் நாம் நல்ல மனதோடும் கருணையுடனும் வாழ வேண்டும் என்ற செய்தியை இப்படத்தின் மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி.
தம்பி ராமையா, சஞ்சிதா ஷெட்டி, முனீஸ்காந்த், ஜெயப்பிரகாஷ், இயக்குநர் பாலாஜிமோகன், ஹரிகிருஷ்ணன் அசோக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை N.K.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் நேரடியாக ZEE5 ஒரிஜினல் OTT தளத்தில் வெளியாகியுள்ளது.
படத்தின் பிளஸ்: 
வழக்கமான காதல், அதிரடி சண்டைக்காட்சிகள், குத்து பாட்டு என்று இல்லாமல் நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து இருப்பது,  நடிகர்கள் அனைவ்வரும் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருப்பது,
படத்தின் மைன்ஸ்: 
படத்தில் மைன்ஸ் என்று சொல்லும் அளவுக்குப் பெரியளவில் எதுவும் இல்லை.
மொத்தத்தில் ‘வினோதய சித்தம்’ அனைவரும் ஒருமுறை பார்க்க வேண்டிய படம்.