வினோதய சித்தம் திரை விமர்சனம் (ரேட்டிங் 5/5)
இயக்குநர் சமுத்திரக்கனி எழுதி இயக்கி நடித்திருக்கும் வினோதய சித்தம் படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.
தம்பி ராமையாவுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவருடைய மகன் தீபக் வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறார். தம்பி ராமையா தான் வேலை பார்க்கும் இடத்தில் பதவி உயர்வு பெறுவதில் முனைப்புடன் இருக்கிறார். தனக்குப் பதவி கிடைத்துவிடும் என்ற மகிழ்ச்சியில் வாகனத்தில் பயணம் செய்கிறார். அப்போது திடீரென ஏற்பட்ட விபத்தில் இறந்துவிடுகிறார்.
தம்பி ராமையாவின் ஆன்மா சமுத்திரக்கனியைச் சந்திக்கிறது. தனது இரண்டு மகளுக்கும் திருமணம் செய்து வைக்கவேண்டும். குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். எனவே தன்னை விட்டுவிடுமாறு தம்பி ராமையா சமுத்திரக்கனியிடம் கெஞ்சுகிறார். அதற்கு சமுத்திரக்கனி 90 நாட்கள் மட்டும் கால அவகாசம் தருகிறார்.
தம்பி ராமையாவுக்கு துணையாக சமுத்திரக்கனியும் செல்கிறார். அந்த 90 நாட்களில் தம...
