கடந்த சில காலங்களாக ஒரு படத்தின் தொடர் பாகம் வர ஆரம்பமாகியுள்ளது என்று தான் சொல்லணும் இதை முதலில் அஜித் thaan பில்லா படம் மூலம் ஆரபித்துவைத்தார் அதை மிக அருமையாக பயன்படுத்தி வெற்றி கண்டவர் என்றால் அது சூர்யா என்று சொல்லணும் சிங்கம் படம் மூன்று பாகம் எடுத்து மிக பெரிய வெற்றியை கண்டவர் இதை தொடர்ந்து பலர் செய்துவந்தனர் தற்போது தமிழ் சினிமாவின் அடுத்த சகலகலாவல்லவன் என்று சொல்லப்படும் தனுஷ் தனது வி.ஐ.பி. படம் மூலம் ஆரம்பித்துள்ளார் என்று தான் சொல்லணும் இன்று வெளியாகிய வி.ஐ.பி,2 அந்த வகையில் மிக பெரிய வெற்றி படம் என்று உறுதி செய்துவிட்டார்.
தனுஷ் தமிழ் சினிமாவின் ஒரு வரபிரசாதம் என்று தான் சொல்லணும் காரணம் அவர் எடுத்து கொள்ளும் எல்லா முயற்சிகளிலும் அதாவது எல்லா துறைகளிலும் வெற்றி என்ற தாரக மந்திரத்தை மட்டும் பார்க்கிறார் என்று சொன்னால் அது மிகையாகது ஆம் ஒரு நடிகனாக பாடல் கதையாசிரியர் இயக்குனர் இப்படி எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கும் ஒரு நம்பிக்கை நட்சித்திரம் என்று தான் சொல்லணும்.
வி.ஐ.பி.2 படத்தின் கதையும் அதன் பின்னணியும் மிகவும் ரசிக்க வைக்கிறது குறிப்பாக படத்தின் திரைகதை மேலும் படத்திற்கு பலம் என்று தான் சொல்லணும் காரணம் முதல் பகுதிக்கும் இரண்டாம் பகுதிக்கும் அருமையான கதையம்சம் கொண்ட படமாக அமைத்துள்ளார் கதையாசிரியர் தனுஷ் என்று தான் சொல்லணும்,
ஒரு இயக்குனராக சௌந்தர்யா ரஜினிகாந்த் இந்த படம் தமிழ் சினிமாவில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார் முதல் படத்தில் விட்ட கோட்டையை இந்த படத்தில் பிடித்து வெற்றி கொடியை பறக்கவிட்டுள்ளார் என்று சொன்னால் மிகையாகது மிக சிறப்பாக தனுஷ் மற்றும் கஜோல் இருவரையும் சமமாக திரைகதையமைதுள்ளர் படத்துக்கு மிக சிறந்த திரைகதை முதல் பகுதி கதாபாத்திரங்களை மிகவும் அழகாக கையாண்டுள்ளார் என்று தான் சொல்லணும் அம்மா சரண்யா கதாபாத்திரம் மிக அருமை மகன் கூப்பிடும்போது அம்மா கணவன் கூப்பிடும்போது பேயா என்று சொல்லும் இடம் செம சூப்பர்
திருவள்ளுவர் இருந்து இருந்தால் காப்பி ரைட்ஸ் பிரச்சனை வந்து இருக்கும் அந்த அளவுக்கு திருக்குறளை பயன் படுதுள்ளர்கள் அதற்கு விளக்கமும் அருமை என்று தான் சொல்லணும்.
படத்தின் கதை முதல் பகுதி போல தான் ஒரு இஞ்சினியர் விருது விழாவில் ஆரம்பிக்குது அதில் எல்லா விருதுகளும் வசுந்திரா கம்பனிக்கு கிடைக்கிறது ஆனால் சிறந்த இஞ்சினியர் விருது மட்டும் தனுஷ்க்கு கிடைக்கிறது. இதை ஏற்க்க முடியாத கஜோல் தனுஷை தன கம்பனில் வேலை செய்ய அழைகிறார் இதில் ஏற்படும் மோதல் தான் கதை முதல் பகுதியில் தனக்கு உதவிய இன்ஜினியர்களை வைத்து சொந்த நிறுவனம் ஆரம்பிக்க நினைக்கும் கனவையும் கஜோல் உடைக்குறார் இதன் மூலம் நடக்கும் பிரச்னைகளை மிக அழகா திரைகதை மூலம் சொல்லி வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் சௌந்தர்யா.
படத்தில் பாசம் அம்மா செண்டிமெண்ட் காதல் சமுதாய நோக்கு பார்வை குடும்ப செண்டிமெண்ட் என்று வாழ்கைக்கு தேவையான அடிப்படி விஷயங்களை மையமாக வைத்து அருமையாக அமைத்துள்ளார் கதையாசிரியர் தனுஷ் என்று தான் சொல்லணும்.
தனுஷ் படத்துக்கு படம் தன்னை செதுக்கிவருகிறார் என்று தான் சொல்லணும் நாம் முன்னதாக சொன்னது போல தமிழ் சினிமாவின் மிக சிறந்த சகலகலாவல்லவன் தான் தனுஷ் காட்சிக்கு காட்சி பின்னி எடுக்கிறார் போன பகுதியில் அப்பாவிடம் மாட்டி கஷ்டபட்ட தனுஷ் இந்த பகுதியில் மனைவி அமலாபால்யிடம் மாட்டி படும் கஷ்டங்களை மிகவும் யதார்த்தமாக சொல்லி நடித்துள்ளார். அதே போல சிறந்த கணவன் சிறந்த மகன் சிறந்த அண்ணன் என்று முப்பரிமாணம் தன நடிப்பில் வெளிபடுத்தியுள்ளார்
அமலாபால் படத்தின் செம கலகலப்பு பாத்திரம் அவர் திரையில் வரும் போதே நமக்குள் ஒரு உற்சாகம் வரும் அளவுக்கு வரும் ஒரு மனைவி பாத்திரம் முதல் பகுதியில் எவ்வளவு அமைதியாக நடித்தாரோ அதற்கு நேர் எதிர் என்று சொல்லணும் தனுஷை கொடுமை பண்ணும் மனைவி ஆனால் இன்பமாக இப்படி ஒரு மனைவி நமக்கு கிடைக்கமாட்டளா என்று தோனும் ஒரு பாத்திரம் தனக்கு கொடுத்த பங்கை மிக நேர்த்தியாக சிறப்பாக ரசிக்கும் படி நடித்துள்ளார்
விவேக் முதல் பகுதி போல தனுஷ்வுடன் வந்து சிரிக்கவைக்கிறார் திகட்டாமல் அப்பாவாக வரும் சமுத்திரகனி சிறந்த நடிகர் என்று நமக்கு தெரியும் இருந்தாலும் இந்த படத்தில் மேலும் சிறப்பு முதல் பகுதியில் எவ்வளவு கடுமையான அப்பா இந்த பகுதியில் மிக சிறந்த நட்புடன் அப்பா என்று தான் சொல்லவைக்கிறது படத்தில் காமெடியை எல்லா கதாப்பாத்திலும் பயன் படுத்துள்ளது சிறப்பு
கஜோல் நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் நடித்து முத்திரைபதிள்ளார் என்று சொன்னால் மிகையாகது மன்னன் விஜயசாந்தியை பார்த்த ஒரு பிரமிப்பு என்று சொல்லலாம் அந்த அளவுக்கு கம்பீரம் தமிழ் தெரியவில்லை என்றாலும் வசனத்தை உணர்ந்து அதற்கு ஏற்ப தன நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் என்று தான் சொல்லணும் படத்துக்கு மிக பெரியபலம் என்றும் சொல்லலாம்
படத்தில் பாடல்கள் பிளஸ் ஆனால் அனிருத் இல்லாதது மிக பெரிய மைனஸ் என்று தான் சொல்லணும் இருந்தும் பின்னணி இசையின் மூலம் அந்த குறை நீங்குகிறது முதல் பாதியில் வந்த இசை பெரும் இடங்களில் பின்னணி இசையாக பயன்படுத்தியுள்ளார்கள்
மொத்தத்தில் வி.ஐ.பி.2 சாதிப்பவன் சாதனையாளன் Rank 4/5