
தமிழ் நடிகர்களில் அகில உலக அளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தனுஷ் என்று சொல்லலாம் இவர் நேரடி ஹிந்தி படங்களில் நடித்தவர் அது மட்டும் இல்லாமல் இவரின் தமிழ் படங்களை டப்பிங் செய்து ரிலீஸ் செய்யும்போதும் பள்ள வரவேற்ப்பு இதனால் தனுஷ் இனி வரும் படங்கள் ஹிந்தியுளும் ரிலீஸ் செய்ய திட்ட மிட்டுள்ளார் என்று கிசுகிசுக்கபடுகிறது . அதன் முதல் கட்டமாக வி.ஐ.பி 2 ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது
செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘வேலையில்லா பட்டதாரி 2’. இந்தப் படத்தில், பாலிவுட் நடிகை கஜோல், முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். தனுஷும் பாலிவுட் படத்தில் நடித்திருப்பதால், அந்த மார்க்கெட்டை வைத்து ஹிந்தியிலும் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
அமிதாப் பச்சன், ரஜினியின் நெருங்கிய நண்பர் என்பதால், அவரையும், அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராயையும் எளிதில் விழாவுக்கு அழைத்துவிடலாம். அதன்மூலம் இந்திய அளவில் இந்தப் படத்தைப் பற்றிப் பேசவைத்து விடலாம் என்று கணக்கு போட்டுள்ளாராம் தனுஷ். இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமலா பால் நடிக்க, அப்பாவாக சமுத்திரக்கனி நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளா
