Sunday, December 8
Shadow

‘சண்டக்கோழி 2’ படக்குழுவுக்கு தங்கம் வழங்கிய விஷால் மற்றும் இயக்குனர் லிங்குசாமி !

சண்டக்கோழி படக்குழுவினருக்கு தங்க மழை தான் தற்போது. ஆம் , சில வாரங்களுக்கு முன் படத்தின் நாயகி படக்குழுவினருக்கு தங்கம் வழங்கினார். அதை தொடர்ந்து தற்போது படக்குழுவினர் 150 பேருக்கு நாயகன் விஷால் மற்றும் இயக்குனர் லிங்குசாமி ஆகியோர் தனித்தனியே தங்கநாணயத்தை பரிசாக வழங்கியதுடன் அனைவருக்கும் விருந்தளித்தனர். நாயகன் மற்றும் இயக்குனர் ஆகியோர் தனித்தனியாக தங்க நாணயம் வழங்கியது படக்குழுவினருக்கு சந்தோஷத்தை தந்துள்ளது.

இயக்குனர் லிங்குசாமி மழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு ருபாய் இரண்டு லட்சத்தை முதலமைச்சர் நிவாரண நிதியின் மூலம் வழங்கியுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்குவில் ஒரே நேரத்தில் அக்டோபர் 18 ஆம் தேதி வெளியாகும் சண்டக்கோழி 2 திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

விஷால் பிலிம் பேக்டரியின் தயாரிப்பில் , யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் சிங்கிள் பாடல் சில நாட்களுக்கு முன் வெளிவந்து மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.