
நடிகர் விஷால் திடீரென ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
பின் தமிழக தேர்தல் ஆணையம் இவரது வேட்புமனு தாக்கலை நிராகரித்தது.இதை எதிர்த்து நடிகர் விஷால் தமிழக தேர்தல் ஆணையர் திரு ராஜேஷ் லக்கானியிடம் முறையிட்டார்.
பிறகு தனக்காக முன் மொழிந்த ஆதரவாளர்களை தொலைபேசி மூலம் மிரட்டல் வந்ததாக கூறி, நடிகர் விஷால் ஆடியோ ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இது குறித்து நடிகர் விஷால் இந்திய தேர்தல் ஆணையம், குடியரசு தலைவர் வரை முறையிட போவதாக கூறியுள்ளார்.
இதற்கு பிறகு என் நாட்டை கடவுள் காப்பாற்ற வேண்டும் என ஆதங்கத்துடன் கூறினார்.
