Sunday, December 7
Shadow

விஜய்யிடம் பிடித்த விஷயம் அஜித்திடம் பிடிக்காத விஷயம் மனம் திறக்கும் விஷால்

நடிகர் விஷால் தாநின்று தமிழ் சிநேமாவில்மிகவும் பயங்கர பிஸி என்று சொல்லணும் காரணம் தமிழ் சினிமாவின் ஓட்டு மொத்த பிரச்சனையும் இவர் தலையில் தான்விழுந்து இருக்கிறது என்று தான் சொல்லணும் ஆம் தயாரிப்பு சங்கம் நடிகர் சங்கம் என்று இரண்டின் முக்கிய பொறுப்பு இதனால் பம்பரம் போல சுழல்கிறார் அதோடு தமிழ் சினிமாவுக்கு நல்ல விஷயங்களும் செய்து கொண்டு தான் இருக்கிறார் . இதற்கிடையில் பிரபல பத்திரிக்கை ஒன்றின் பேட்டியில் விஜய் அஜித் இருவரின் தமிழ் சினிமா பங்களிப்பை பட்டியும் அவர்களிடம் பிடித்த பிடிக்காத விஷயங்களை பற்றி கூயுள்ளார் .

விஜய் கிட்ட பிடிச்சது என்னன்னு கேட்டா அரைமணி நேரம் பேசுவேன். விஜய் சாரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரோட தன்னம்பிக்கை பிடிக்கும். . அவரோட பொறுமை பிடிக்கும். ஏன்னா, அவருக்கு வந்த விமர்சனங்களெல்லாம் சாதாரணமானது கிடையாது. இவர் இடத்துல மத்தவங்க இருந்திருந்தா, எல்லாத்தையும் விட்டுட்டுப் போயிருப்பாங்க. ஆனா, அதையெல்லாம் மீறி நிற்கிறார்னா, ஹாட்ஸ் ஆஃப் டூ விஜய் சார்! மத்தபடி, பிடிக்காததுனு விஜய் சார்கிட்ட எதுவும் இல்லை.”

அஜித் பல நேரங்களில் அன்-அவைலபிளா இருப்பார். ஒரு விஷயம் பண்ணும்போது, அவரைச் சந்திக்க முடியாது. இதுமட்டும்தான் அவர்கிட்ட எனக்குப் பிடிக்காத விஷயம். ரீச் பண்ண முடியாத இடத்துல இருப்பதுதான் அஜித்திடம் எனக்குப் பிடிக்காத விஷயம்!”