Friday, February 7
Shadow

ராதாரவியின் தரக்குறைவான பேச்சுக்கு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனம்.

நயன்தாரா நடிப்பில் வெளியாகவிருக்கும் கொலையுதிர் காலம் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில், நடிகர் ராதாரவி, நயன்தாராவை பற்றி தரக்குறைவாகவ கடுமையாக விமர்சித்திருந்தார். அவரின் இந்த பேச்சு பெண்களை மட்டுமல்லாது, ஆண்கள் மனதையும் புண்படுத்தியது.

பல பிரபலங்களும் ராதாரவியின் பேச்சுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள நிலையில், விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் ராதாரவிக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அவர், ராதா ரவி அவர்களே, நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் இருக்கும் நான், சமீபத்தில் பெண்களை பற்றி நீங்கள் இழிவாகப் பேசியதற்காகவும், உங்களது முட்டாள்தனத்திற்காகவும் உங்களுக்கு எதிராக கண்டன கடிதத்தில் கையொப்பமட வேண்டும் என்பது தான் எனது விருப்பம்.

உங்கள் பெயரிலும் ஒரு பெண் பெயர் சேர்ந்திருப்பதால் அந்தப் பெயரை நீக்கிவிட்டு, இப்பொழுது முதல் உங்களை ரவி என்றே அழைத்துக்கொள்ளுங்கள். இவ்வாறு நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.