Monday, May 25
Shadow

விஸ்வாசம் படத்துக்கும் தளபதி 63க்கும் புது ஒரு தொடர்பு

*விஸ்வாசத்தை தொடர்ந்து தளபதி படத்தின் தியேட்டரிக்கல் ரைட்ஸ் வாங்கிய நிறுவனம்*

தளபதி 63 படத்திற்கான சூட்டிங்கள் அதிவேகமாக நடைபெற்று வருகிறது. இந்த இந்த படக்குழுவினர் கடந்த மாதம் சென்னையில் சூட்டிங் நடத்தினார். இயக்குனர் அட்லி இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, விவேக், கதிர், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசை அமைக்கிறார். இந்நிலையில், தளபதி படத்தின் இன்ட்ரோ பாடலை இந்த குழுவினர் சூட்டிங் செய்து முடித்துள்ளனர்.

தளபதி 63 படம் AGS என்டர்டேய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது என்பது ஏற்கனவே தெரிந்த ஒன்று என்ற போதும், இந்த படத்திற்கான தியேட்டரிக்கல் ரைட்ஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 63 படத்தின் தமிழ் நாட்டு தியேட்டரிக்கல் ரைட்ஸ்-ஐ KJR ஸ்டுடியோசின் கோட்டபாடி ராஜேஷ் வாக்கியுள்ளதாக நெருக்கிய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

KJR ஸ்டுடியோசின் அஜித் நடிப்பில் வெளியான பிளாக்பஸ்டர் படம் விஸ்வாசம் படத்தின் தியேட்டரிக்கல் ரைட்ஸ் பெற்றது. இதற்கு முன்பு ஆறாம், குலேபாகவாலி, ஆரியா போன்ற படங்களின் வெளியிட்டு உரிமையை பெற்றது. கூடுதலாக தளபதி 63 படத்தின் தியேட்டரிக்கல் ரைட்ஸ் பெற்றுள்ளது பெரியளவில் பாசிட்டிவ் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.