Monday, April 20
Shadow

சர்கார் வசூலை மிஞ்சிய அஜித்தின் விஸ்வாசம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினியின் பேட்ட, அஜித் நடிப்பில் விஸ்வாசம் ஆகிய படங்கள் ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வந்தன. இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது

அதேவேளையில், இருவரில் எந்த நடிகரின் படம் வசூலைக் குவித்து சாதனை படைத்தது என்று பாக்ஸ் ஆஃபிஸ் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். அதன் உச்சகட்டமாக பேட்ட படத்தை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம், படம் வெளியான 11 நாட்களில் ரூ.100 கோடி வசூலைத் தாண்டும் என பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்த கருத்தை வெளியிட்டது.

இதையடுத்து விஸ்வாசம் படத்தை வெளியிட்ட கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் விஸ்வாசம் படம் தமிழகத்தில் மட்டும் ரூ.125 கோடி வசூலித்திருப்பதாக தனது ட்விட்டர் பக்க பதிவில் தெரிவித்தது.

 

இந்த நிலையில் ஆந்திராவில் இருக்கும் எஸ்.ஜே. சினிமாஸ் திரையரங்க நிறுவனர் வருண் தனது ட்விட்டர் பக்க பதிவில், “சர்கார் பட வசூலை விஸ்வாசம் முறியடித்துவிட்டதாகவும், விரைவில் ரஜினிகாந்தின் 2.0 பட வசூலை முறியடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.