Wednesday, June 24
Shadow

விஜய்யின் மெர்சலை பின்னுக்கு தள்ளிய அஜித்தின் விஸ்வாசம்

தமிழ் சினிமாவில் அஜித் மற்றும் விஜய் மோதல் எப்போது உண்டு இது அஜித் விஜய் இருவர் மோதல் இல்லை இவர்கள் ரசிகர்கள் மோதல் தான் சமீபகாலமாக இந்த மோதலில் விஜய் தான் வெற்றி பெற்றார் ஆனால் இந்த முறை அஜித் விஜய்யை முந்திவிட்டார் என்று தான் சொல்லணும் விஜய் மட்டும் இல்லை ரஜினிகாந்தையும் முந்திவிட்டார் இதனால் மீண்டும் இழந்த கோலிவுட் கோட்டையை கைப்பற்றியுள்ள அஜித்

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த படம் ‘விஸ்வாசம்’. இந்தப் படத்தில் நயன்தாரா, ரோபோ சங்கர், யோகி பாபு, தம்பி ராமையா, விவேக், கோவை சரளா உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்ப்பார்ப்பில் இருந்த படம்.

ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது போலவே ‘விஸ்வாசம்’ படமும் அமைந்தது. இந்நிலையில் ‘விஸ்வாசம்’ படம் தமிழகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதிலும் குடும்ப ரசிகர்களை இப்படம் மிகவும் கவர்ந்துவிட்டது.

அதனாலே தமிழகத்தில் ரூ 130 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது, இந்நிலையில் ‘விஸ்வாசம்’ தமிழக அளவில் விஜய்யின் ‘மெர்சல்பட வசூலை முறியடித்துவிட்டது. அது மட்டுமின்றி சென்னை பாக்ஸ் ஆபிஸில் நேற்றோடு ‘மெர்சல்’ வசூலை ‘விஸ்வாசம்’ படம் பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளது.