Sunday, June 28
Shadow

வியட்நாம் வீடு சுந்தரம் மறைந்த தினம் பதிவு

தமிழின் முன்னணி நடிகர்கள் பலருக்கும் திரைக்கதை எழுதியுள்ள இவர் நடிகர் சிவாஜி கணேசனின் விருப்பமான கதையாசிரியர் ஆவார். கௌரவம் உள்ளிட்ட சுமார் பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியள்ள இவர் சிறப்பான குடும்பக் கதைகளுக்காக அறியப்படுகிறார். இவரது கதைகள் தமிழ் மட்டுமின்றி இதர மொழிகளிலும் படமாக்கப்பட்டுள்ளன. தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார்.

வியட்நாம் வீடு சுந்தரம் அவர்கள் திரையுலகம் கண்ட மிகச் சிறந்த திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவர் ஆவார். 1970-ஆம் ஆண்டு “வியட்நாம் வீடு” என்ற மாபெரும் வெற்றி திரைப்படத்தின் மூலம் திரைக்கதை ஆசிரியராக திரையுலகில் அறிமுகமானார். இவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த “நான் ஏன் பிறந்தேன்”, “நாளை நமதே” ஆகிய படங்களுக்கு திரைக்கதை ஆசிரியராக இருந்ததோடு, பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் குடும்பப்பாங்கான கதைகளை இயக்குவதில் வல்லவர்.

வியட்நாம் வீடு” திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருது, அறிஞர் அண்ணா விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி பல தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துள்ளார்.

இவர் 2016 ஆண்டு 6 அதிகாலை தனது 76வது வயதில் சென்னை, தியாகராயர் நகரில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.

இவர் இயக்கிய திரைப்படங்கள்

கண்ணாமூச்சி ஏனடா, கௌரவம், விஜயா, தேவி ஸ்ரீ கருமாரியம்மன், ஞான பறவை