Saturday, March 22
Shadow

ஜெயம் ரவி – ஹன்சிகா ‘போகன்’ ரிலீஸ் எப்போது ?

ஜெயம் ரவி – ஹன்சிகா மூன்றாவது முறையாக இணைந்து நடித்திருக்கும் ‘போகன்’ படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தை ‘ரோமியோ ஜுலியட்’ படத்தை இயக்கிய லக்ஷமண் இயக்கியுள்ளார்.

கடந்த வருடம் நான்கு வெற்றிப்படங்களை கொடுத்த ஜெயம் ரவி, இந்த வருடம் ‘மிருதன்’ என்ற ஒரேயொரு படத்தை மட்டுமே ரிலீஸ் செய்துள்ளார். ‘போகன்’ படத்தின் பணிகள் முடிந்துவிட்டதால் இந்த வருடம் வெளியாகி ஜெயம் ரவியின் கணக்கில் மேலும் ஒரு வெற்றியை கொடுத்துவிடுமா? என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அதன்படி, இந்த படம் வருகிற டிசம்பர் மாதத்தில் வெளியிடப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இப்படத்தை தயாரித்துள்ள பிரபுதேவா, நேற்று நடைபெற்ற ‘தேவி’ ஆடியோ வெளியீட்டின்போது ‘போகன்’ படத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்தார். அதன்படி, டிசம்பரில் ‘போகன்’ படம் வெளியாகும் என்றும், ‘போகன்’ படத்தை சமீபத்தில் தான் பார்த்ததாகவும், ‘தனி ஒருவன்’ படத்திற்கு பின்னர் ஜெயம் ரவிக்கு இந்த படம் பெரிய வெற்றியைக் கொடுக்கும் என்றும் கூறியுள்ளார்.

‘போகன்’ படத்தில் ஜெயம் ரவி, அரவிந்தசாமி, வி.டி.வி.கணேஷ், ஆடுகளம் நரேன், அஸ்வின் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார். பிரபு தேவா ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

Leave a Reply