Sunday, May 17
Shadow

இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணத்திற்கு AI தொழில்நுட்பத்தில் உருவாகும் உலகத் தர புகழஞ்சலி!

இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணத்திற்கு AI தொழில்நுட்பத்தில் உருவாகும் உலகத் தர புகழஞ்சலி!

 

இந்திய திரையுலகில் இசையின் முகவரியாக திகழும் இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டு திரைப்பயணத்தை முன்னிட்டு, அவருக்கு உலகத் தரத்தில் ஒரு சிறப்பு சினிமாப் புகழஞ்சலி தயாராகி வருகிறது. இந்த முயற்சியில் Connekkt Media, Mercuri Movies மற்றும் WPP Production ஆகிய நிறுவனங்கள் இணைந்துள்ளன.

 

1976ஆம் ஆண்டு வெளியான அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, கடந்த ஐந்து தசாப்தங்களாக இந்திய சினிமாவின் இசை மொழியையே மாற்றியமைத்தவர். ஆயிரக்கணக்கான பாடல்கள், பல மொழிகளில் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் என அவரது இசை உலகம் தலைமுறைகளை கடந்தும் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கிறது.

 

இந்த பொற்கால சாதனையை கொண்டாடும் விதமாக, புதிய தலைமுறை AI தொழில்நுட்பம் மற்றும் நவீன திரைப்பட உருவாக்க முறைகளை பயன்படுத்தி, உணர்ச்சி மிக்க காட்சிப் புகழஞ்சலி உருவாக்கப்படுகிறது. இளையராஜாவின் இசை ஏற்படுத்திய தாக்கத்தையும், அவரது கலைப் பயணத்தின் மகத்துவத்தையும் உலக அளவிலான தரத்தில் பதிவு செய்யும் முயற்சியாக இது அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Connekkt Media நிறுவனத்தின் நிறுவனர் வருண் மாத்தூர் கூறுகையில், “இளையராஜா சார் இசை என்பது வெறும் பாடல்களல்ல; பல தலைமுறைகளின் வாழ்க்கை நினைவுகள். அவரின் 50 ஆண்டு சாதனையை கொண்டாடும் இந்த முயற்சி, இந்திய உள்ளடக்க உலகில் புதிய தரத்தை உருவாக்கும்,” என்றார்.

 

Mercuri Group நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீராம் பக்திசரண் கூறுகையில், “AI தொழில்நுட்பத்தின் உதவியுடன், படைப்பாற்றலை பாதிக்காமல் உலகத் தரத்தில் உள்ளடக்கங்களை உருவாக்க முடியும் என்பதை இந்த முயற்சி நிரூபிக்கும்,” என்றார்.

 

WPP Production நிறுவனத்தின் CEO கார்த்திக் நாகராஜன் கூறுகையில், “இளையராஜாவின் இசை பல தலைமுறைகளின் உணர்வுகளுடன் கலந்த ஒன்று. அந்த உணர்வை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் புதிய வடிவில் கொண்டுவரும் முயற்சிதான் இது,” என்று தெரிவித்தார்.

 

இசை, தொழில்நுட்பம் மற்றும் சினிமா இணையும் இந்த முயற்சி, இளையராஜாவின் இசைப் பாரம்பரியத்தை புதிய தலைமுறைக்கும் புதிய அனுபவமாக கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

World-Class AI-Powered Cinematic Tribute Planned for Ilaiyaraaja’s 50-Year Musical Journey!

A grand cinematic tribute is being created to celebrate the 50-year journey of legendary composer Ilaiyaraaja, who has remained one of the defining musical voices of Indian cinema. The special project is being jointly produced by Connekkt Media, Mercuri Movies, and WPP Production.

Ilaiyaraaja, who made his debut as a music composer with the 1976 film Annakili, went on to transform the soundscape of Indian cinema over the last five decades. With thousands of songs and hundreds of films across multiple languages, his music continues to hold a timeless emotional connection with audiences across generations.

To commemorate this milestone, the makers are developing a visually rich and emotionally engaging cinematic tribute using next-generation AI technology and advanced filmmaking techniques. The project aims to capture the depth of Ilaiyaraaja’s musical legacy and present it on a global scale with modern storytelling and visual innovation.

Speaking about the initiative, Varun Mathur, Founder of Connekkt Media, said, “Ilaiyaraaja sir’s music is not just a collection of songs; it is an emotional memory for generations. This tribute will set a new benchmark for Indian content on the global stage.”

Sriram Bakthisaran, MD & Group CEO of Mercuri Group, stated, “This initiative will demonstrate how AI technology can help create world-class content while preserving the essence of creativity and artistic expression.”

Karthik Nagarajan, CEO of WPP Production, added, “Ilaiyaraaja’s music is deeply woven into the emotions of multiple generations. This project is an attempt to present that timeless emotion through the lens of modern technology.”

The tribute is expected to become a unique blend of music, cinema, and technology, introducing Ilaiyaraaja’s legendary musical legacy to newer generations in a fresh and immersive way.