இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணத்திற்கு AI தொழில்நுட்பத்தில் உருவாகும் உலகத் தர புகழஞ்சலி!
இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணத்திற்கு AI தொழில்நுட்பத்தில் உருவாகும் உலகத் தர புகழஞ்சலி!
இந்திய திரையுலகில் இசையின் முகவரியாக திகழும் இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டு திரைப்பயணத்தை முன்னிட்டு, அவருக்கு உலகத் தரத்தில் ஒரு சிறப்பு சினிமாப் புகழஞ்சலி தயாராகி வருகிறது. இந்த முயற்சியில் Connekkt Media, Mercuri Movies மற்றும் WPP Production ஆகிய நிறுவனங்கள் இணைந்துள்ளன.
1976ஆம் ஆண்டு வெளியான அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, கடந்த ஐந்து தசாப்தங்களாக இந்திய சினிமாவின் இசை மொழியையே மாற்றியமைத்தவர். ஆயிரக்கணக்கான பாடல்கள், பல மொழிகளில் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் என அவரது இசை உலகம் தலைமுறைகளை கடந்தும் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கிறது.
இந்த பொற்கால சாதனையை கொண்டாடும் விதமாக, புதிய தலைமுறை AI தொழில்நுட்பம் மற்றும் நவீன திரை...
