
பாலகுமாரன் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். 150 இற்கும் மேற்பட்ட புதினங்கள், நூறிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனங்களையும் எழுதியவர்.
பாலகுமாரன் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி வட்டத்தில் உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் வைத்தியநாதன், சுலோசனா ஆகியோருக்கு 1946 ஆம் ஆண்டு பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர் தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பின்னர் இழுவை இயந்திரம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும் கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.
இவர் திரைக்கதை எழுதிய படங்கள்: நாயகன், குணா, செண்பகத் தோட்டம், ஜென்டில்மேன், காதலன், கிழக்கு மலை, மதங்கள் எழு, ரகசிய போலிஸ், பாட்ஷா, சிவசக்தி, சுரேஷ் கிருஷ்ணா, உல்லாசம், வேலை , வல்லவன், ஜீன்ஸ், முகவரி, உயிரிலே கலந்து, சிட்டிசன், சரவண சுப்பையா, மஜ்னு, கிங், காதல் சடுகுடு, மன்மதன், கலாபக் காதலன், புதுப்பேட்டை
