Sunday, June 21
Shadow

நடிகர் பீலி சிவம் பிறந்த தின பதிவு

பீலி சிவம் தமிழ்த் திரைப்பட நடிகராவார். திரைத்துறையிலும், தொலைக்காட்சி நாடகங்களிலும் சுமார் 60 ஆண்டுகள் நடித்தவர். நாடகத்துறையின் சிறந்த நடிகராக தமிழக அரசின் கலைமாமணி விருதினை 1995 ஆம் ஆண்டு பெற்றார்.

‘தூரத்து இடி முழக்கம்’ படம் மூலம் அறிமுகமானவர் பீலி சிவம். இப்படத்திற்கு பிறகு ‘அழகன்’, ‘கங்காகவுரி, ‘விருதகிரி’, ‘தங்க பாப்பா’, ‘அபிமன்யு’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.

25 செப்டம்பர் 2017 அன்று உடல்நலக் குறைவு காரணமாக தனது 79 ஆவது வயதில் மதுரையில் காலமானார்.