
ஏழு மொழிகளில் அதிரடி உள்ளடக்கப் புரட்சி: இந்திய பொழுதுபோக்கு உலகில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் ZEE5
சென்னை:
இந்தியாவில் டிஜிட்டல் பொழுதுபோக்கு துறையில் போட்டி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ZEE5 தனது மிகப்பெரிய பல்மொழி (Multilingual) உள்ளடக்கத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, வெறும் புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியலாக இல்லாமல், அடுத்த சில ஆண்டுகளுக்கான ZEE5-ன் உள்ளடக்கத் திசையை வெளிப்படுத்தும் முக்கியமான அறிவிப்பாக பார்க்கப்படுகிறது.
இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் வங்காளம் என ஏழு மொழிகளில் உருவாகும் திரைப்படங்கள், வெப் தொடர்கள், விளையாட்டு ஒளிபரப்புகள், AI தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட படைப்புகள், அனிமேஷன் மற்றும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் என அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் சென்றடையும் வகையில் விரிவான திட்டத்தை ZEE5 வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள், இயக்குநர்கள் மற்றும் படைப்பாளர்களுடன் இணைந்து தரமான, கலாச்சார அடையாளம் கொண்ட கதைகளை உருவாக்குவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும். வெறும் பொழுதுபோக்கை வழங்குவது மட்டுமல்லாமல், சமூகத்தில் விவாதங்களை உருவாக்கும், மொழி மற்றும் மாநில எல்லைகளைத் தாண்டி பயணிக்கும் கதைகளை உருவாக்கும் நோக்கத்தையும் ZEE5 வலியுறுத்தியுள்ளது.
தமிழ் ரசிகர்களுக்கான முக்கிய அறிவிப்புகள்
தமிழ் பார்வையாளர்களுக்காக Koose Munisamy Veerappan மற்றும் Thadayam தொடர்களின் புதிய பாகங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் Ananthakaalam மற்றும் இந்தியாவின் முதல் சுயாதீன ராப் பேட்டில் நிகழ்ச்சியாக உருவாகும் Thee Kural ஆகிய புதிய ஒரிஜினல்களும் வெளியாக உள்ளன.
திரைப்பட வரிசையில் Demonte Colony 3, நயன்தாரா மற்றும் கவின் இணைந்து நடித்துள்ள Hi! மற்றும் Raawadi ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன.
பிற மொழிகளிலும் வலுவான உள்ளடக்கங்கள்
இந்தியில் Kambli, The Scam: Leaked, Coffee King, Rangbaaz Season 4 உள்ளிட்ட தொடர்களும், Hai Jawani Toh Ishq Hona Hai, Bandar, Pooja Meri Jaan உள்ளிட்ட திரைப்படங்களும் வெளியாகின்றன.
தெலுங்கில் Shrimathi, Objection Mylord உள்ளிட்ட ஒரிஜினல்கள், Venky Anil 5, NBK111 போன்ற திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.

கன்னடத்தில் Bitcoin Scam, Operation Bangara, Karavali, மலையாளத்தில் A Queen, Malabar Cup, Kerala Underground, மராத்தியில் Hey Kay Navin? புதிய சீசன், Bhootam Bhayam, வங்காளத்தில் Shwetkali, Lalbazaar புதிய சீசன்கள் மற்றும் Priyo Bondhu உள்ளிட்ட புதிய படைப்புகளும் இடம்பெற்றுள்ளன.
விளையாட்டுக்கும் முக்கியத்துவம்
பொழுதுபோக்கு மட்டுமின்றி, FIFA போட்டிகள், Bundesliga, ILT Season 5 மற்றும் Tamil Nadu Kabaddi போன்ற முக்கிய விளையாட்டு தொடர்களின் நேரடி ஒளிபரப்புகளையும் ZEE5 தொடர்ந்து வழங்கவுள்ளது.
AI மற்றும் குழந்தைகளுக்கான பிரத்யேக உள்ளடக்கங்கள்
AI அடிப்படையிலான கதை சொல்லல், அனிமேஷன் மற்றும் புராணக் கதைகளை மையமாகக் கொண்ட Garud – Ek Yodha Ki Gatha, Vikram Betal, Shiv Sati – Ek Anant Prem Kahani, Aiyappan உள்ளிட்ட பல புதிய படைப்புகள் அறிமுகமாகின்றன.
குழந்தைகளுக்காக Smart KidZ, Tales of Krishna, Bandbudh and Budbak 2.0 உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளும் தயாராகியுள்ளன.
ZEE5 நிர்வாகம் கூறுவது
ZEE5 இந்தியாவின் வணிகத் தலைவர் தேஜ்கரண் சிங் பஜாஜ் கூறுகையில், இந்திய பார்வையாளர்களின் ரசனை தொடர்ந்து மாறிவரும் நிலையில், தரமான, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட மற்றும் பல்மொழி உள்ளடக்கங்களை வழங்குவதே நிறுவனத்தின் அடுத்தகட்ட இலக்கு என்றார்.
ZEE-யின் தலைமை படைப்பு அலுவலர் ராகவேந்திர ஹுன்சூர் கூறுகையில், எண்ணிக்கையை விட தரத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் மக்களின் மனதில் நீடிக்கும் கதைகளையே உருவாக்கும் நோக்கத்தில் இந்த புதிய உள்ளடக்கத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
உலகளாவிய பார்வை
190-க்கும் மேற்பட்ட நாடுகளில் சேவை வழங்கி வரும் ZEE5, இந்தியாவின் உள்ளூர் கதைகளை உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. மேலும், 2034 வரை FIFA-வுடன் மேற்கொண்டுள்ள நீண்டகால கூட்டாண்மையின் மூலம் FIFA World Cup 2026™ மற்றும் FIFA World Cup 2030™ உள்ளிட்ட முக்கிய கால்பந்து போட்டிகளின் டிஜிட்டல் ஒளிபரப்பையும் வழங்க உள்ளது.
பல மொழிகளில் தரமான திரைப்படங்கள், வெப் தொடர்கள், விளையாட்டு, AI, அனிமேஷன் மற்றும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளை ஒரே தளத்தில் வழங்கும் இந்த புதிய அறிவிப்பு, இந்திய டிஜிட்டல் பொழுதுபோக்கு சந்தையில் ZEE5-ன் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

ZEE5 Unveils Its Biggest-Ever Multilingual Content Slate Across Seven Languages
Chennai:
In a major move that is set to redefine India’s digital entertainment landscape, ZEE5 has unveiled its biggest-ever multilingual content slate, featuring an extensive lineup of films, web series, live sports, AI-powered storytelling, animation, and children’s programming. More than just a content announcement, the slate reflects ZEE5’s long-term vision of delivering culturally rooted, high-quality stories to audiences across India and beyond.
The platform will offer original and exclusive content in seven Indian languages—Hindi, Tamil, Telugu, Malayalam, Kannada, Marathi, and Bengali—bringing together diverse storytelling under one roof.
Designed to go beyond conventional entertainment, the new slate aims to present bold narratives that spark conversations, celebrate regional cultures, and connect audiences across linguistic and geographical boundaries.
Tamil Lineup Highlights
Tamil audiences can look forward to new installments of the much-awaited series Koose Munisamy Veerappan and Thadayam.
The platform will also introduce two new originals—Ananthakaalam and Thee Kural, India’s first independent rap battle reality show.
On the film front, the Tamil lineup includes Demonte Colony 3, Hi!, starring Nayanthara and Kavin, and Raawadi.

Strong Regional and Hindi Slate
The Hindi lineup features web series such as Kambli, The Scam: Leaked, Coffee King, Rangbaaz Season 4, Bakaiti Season 2, and Janaawar 2.
Upcoming Hindi films include Hai Jawani Toh Ishq Hona Hai, Bandar, Pooja Meri Jaan, Bharat Bhagya Vidhata, Sarvgunn Sampann, Ghamasaan, Ikroop, and Dalimb.
In Telugu, viewers can expect originals like Shrimathi and Objection Mylord, along with films including Venky Anil 5, NBK111, and Vrushakarma.
The Kannada slate features Bitcoin Scam, Operation Bangara, and Karavali, while Malayalam audiences will get A Queen, Malabar Cup, Kerala Underground, and Balan The Boy.
The Marathi lineup includes Hey Kay Navin? (new season), Aga Aai, Aaho Aai, Tumbadchi Manjula, and Bhootam Bhayam. Bengali viewers can look forward to new seasons of Shwetkali and Lalbazaar, along with fresh originals such as Aloor Dosh and Priyo Bondhu.

Live Sports and AI-Powered Entertainment
Expanding beyond films and web series, ZEE5 will continue to stream major sporting events, including FIFA®, Bundesliga, ILT Season 5, and Tamil Nadu Kabaddi.
The platform is also investing in AI-powered storytelling and animation with titles such as Garud – Ek Yodha Ki Gatha, Vikram Betal, Shiv Sati – Ek Anant Prem Kahani, Tirupati Balaji, Ram Anjaney Yuddh, Aiyappan, and Narmada Manasa Sundari.
For younger audiences, ZEE5 has announced children’s content including Shivlok Ke Kundakka Mandakka, Smart KidZ, Tales of Krishna, and Bandbudh and Budbak 2.0.
Leadership Vision
Speaking about the announcement, Tejkaran Singh Bajaj, Chief Business Officer, ZEE5 India, said the platform’s ambition is not just to follow entertainment trends but to create them. He added that the new multilingual slate reflects ZEE5’s commitment to bringing together India’s finest creators, production houses, and talent while delivering an enhanced user experience through advanced technology and personalized services.
Raghavendra Hunsur, Chief Content Officer, ZEE, said every project in the slate has been selected with a clear purpose. He emphasized that the company prioritizes meaningful, high-quality storytelling over sheer volume, creating content that resonates with audiences across languages and genres.
A Global Entertainment Destination
Available in more than 190 countries, ZEE5 continues to strengthen its position as one of India’s leading homegrown streaming platforms, taking Indian stories to audiences worldwide.
The platform also holds a long-term partnership with FIFA through 2034, enabling digital streaming of marquee football events in India, including the FIFA World Cup 2026™ and FIFA World Cup 2030™.
With an expansive lineup spanning movies, original web series, live sports, AI-driven storytelling, animation, and children’s entertainment across seven languages, ZEE5’s latest multilingual content slate marks a significant milestone in the evolution of India’s digital streaming industry.
