ஏழு மொழிகளில் அதிரடி உள்ளடக்கப் புரட்சி: இந்திய பொழுதுபோக்கு உலகில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் ZEE5
ஏழு மொழிகளில் அதிரடி உள்ளடக்கப் புரட்சி: இந்திய பொழுதுபோக்கு உலகில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் ZEE5
சென்னை:
இந்தியாவில் டிஜிட்டல் பொழுதுபோக்கு துறையில் போட்டி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ZEE5 தனது மிகப்பெரிய பல்மொழி (Multilingual) உள்ளடக்கத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, வெறும் புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியலாக இல்லாமல், அடுத்த சில ஆண்டுகளுக்கான ZEE5-ன் உள்ளடக்கத் திசையை வெளிப்படுத்தும் முக்கியமான அறிவிப்பாக பார்க்கப்படுகிறது.
இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் வங்காளம் என ஏழு மொழிகளில் உருவாகும் திரைப்படங்கள், வெப் தொடர்கள், விளையாட்டு ஒளிபரப்புகள், AI தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட படைப்புகள், அனிமேஷன் மற்றும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் என ...


