‘வாலம்பா’ என்னும் பாட்டியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு, இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கி இருக்கும் திரைப்படம் ‘அம்மணி’. டேக் என்டர்டைன்மெண்ட்’ சார்பில் வெண் கோவிந்தா தயாரித்து இருக்கும் ‘அம்மணி’ திரைப்படமானது, வருகின்ற அக்டோபர் 14 ஆம் தேதி திரைக்கு வர இருக்கின்றது. சமீப நாட்களாகவே ‘அம்மணி’ படத்தினால் ஏற்பட்டு இருக்கும் எதிர்பார்ப்பானாது, ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே போகிறது… வலுவான கதை களமும், சிறந்த கதையம்சமும் தான் அதற்கு காரணம் என்பதை உறுதியாகவே சொல்லலாம். ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகளவில் பெற்று வரும் அம்மணி திரைப்படத்தின் விநியோக உரிமையை தற்போது, ரசிகர்களுக்கு தரம் வாய்ந்த படங்களை வழங்கி வரும் ‘எஸ் பிச்சர்ஸ்’ நிறுவனம் வாங்கியிருப்பது மேலும் சிறப்பு.
“அம்மணி திரைப்படத்தை பற்றி விளக்கி கூற வார்த்தைகளே இல்லை…. உன்னதமான உறவு என்றால் என்ன என்பதை அம்மணி திரைப்படத்தை பார்த்த பிறகு நாங்கள் உணர்ந்து கொண்டோம்…சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ள எல்லா தரப்பு ரசிகர்களின் உள்ளத்திலும் அம்மணி திரைப்படம் பயணிக்கும்…இத்தகைய வலிமையான கதையம்சத்தில் உருவாகி இருக்கும் அம்மணி திரைப்படத்தின் விநியோக உரிமையை நாங்கள் வாங்கியிருப்பது, எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது…” என்று கூறினார் ‘எஸ் பிச்சர்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் சீனு