Wednesday, April 30
Shadow

இனி சினிமாவில் எப்படி நடிப்பார் என்று சவால் விடும் அமலாபால் மாமனார்

அமலாபால் – விஜய் ஜோடி திருமணமான இரண்டே ஆண்டுகளில் பிரிந்துவிட்டனர். இருவரும் விவாகரத்து பத்திரத்திலும் கையெழுத்து இட்டுவிட்டனர். இதன்பிறகும் கூட அமலாபால் மாமனாரை கண்டு அஞ்சுகின்றாராம். தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனுடனான நட்பை இழக்க விரும்பாத, சில சினிமா பட தயாரிப்பாளர்கள் அமலா பாலை தங்களின் படங்களில் நடிக்க வைப்பது இல்லை என்று முடிவு செய்துள்ளார்களாம். அமலாபலுக்கு கிடைத்த இரண்டு படத்தின் வாய்ப்பு பறிபோய்விட்டது. வடசென்னை படத்தில் கூட இன்னும் முழுமையாக கன்பார்ம் ஆகவில்லை.

இதனால் அமலாபால் அப்செட். இந்த அறிவிக்கப்படாத தடை குறித்து அமலா பால் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தனிப்பட்ட விஷயங்கள் பற்றி செய்தியாளர்களிடம் பேசுவது இல்லை என்ற முடிவில் உள்ளார் அமலா. தெலுங்கு, மலையாளம் சினிமா பக்கமும் தூது அனுப்பி உள்ளாராம்.

இனி எப்படி நடிக்கிறார் என்று பார்க்கலாம் என்று சாவல் விடும் ஏ.எல். அழகப்பன் தமிழ் மட்டும் இல்லை  எந்த மொழியிலும் என்று சொல்லிவருகிறாராம் இதை அறிந்தும் அறியாமலும் இருக்கும் இயக்குனர் விஜய் .

Leave a Reply