திரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘நாயகி’ படம் அவரை கவிழ்த்துவிட்டாலும், ‘கொடி’ படம் அவரை தாங்கி பிடித்துக் கொண்டது. கடந்த 13 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கிற திரிஷாவுக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டு பின்பு பாதியிலேயே நின்றுபோனது.
இந்நிலையில், தற்போது படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் திரிஷாவுக்கு சினிமாதான் உயிர் மூச்சாம். இதுகுறித்து அவர் கூறும்போது, சினிமா தான் என்னுடைய உயிர் மூச்சு. நான் நடித்துக் கொண்டிருக்கும்போதே என்னுடைய உயிர் பிரிய வேண்டும் என்பதே எனது ஆசை.
சினிமாதான் என்னுடைய பலம். அதனால்தானோ என்னவோ, என்னுடைய திருமணம்கூட நின்று போய்விட்டது. என்னுடைய கர்ப்ப காலத்தில் மட்டும்தான் நடிப்புக்கு சற்று இடைவெளி விடுவேன். மற்றபடி, தொடர்ந்து நடிக்கத்தான் செய்வேன் என்று கூறியுள்ளார்.
திரிஷா நடிப்பில் தற்போது ‘மோகினி’, ‘சதுரங்கவேட்டை -2’, ‘கர்ஜனை’ ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.