Monday, September 14
Shadow

மகளிர் சங்கங்களுக்கு மம்முட்டி மறைமுக பதிலடி..!

வரும் அக்-7ஆம் தேதி மம்முட்டி நடித்த ‘தோப்பில் ஜோப்பன்’ படம் ரிலீஸாகிறது.. ஜானி ஆண்டனி இயக்கியுள்ள இந்தப்படத்தில் ஆண்ட்ரியா, மம்தா மோகன்தாஸ் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். இந்தப்படம் அக்மார்க் குடும்பப்படமாக உருவாகியுள்ளதாம்.. இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய மம்முட்டி, “இந்தப்படத்தில் மதுபானம் நிரம்பிய பாட்டிலையோ, கிளாசையோ கையில் வைத்துக்கொண்டு அப்படியும் இப்படியும் நடப்பேனே தவிர, குடிப்பது போல நடிக்கவில்லை” என கூறினார்..

என்னடா திடீரென இவர் இப்படி பேசுகிறாரே என நினைக்கும்போதே அடுத்ததாக, “எப்படி சாப்பாட்டு வகைகளில் ஒருத்தருக்கு காரம், ஒருத்தருக்கு உப்பு என சுவை மாறுபட்டு பிடிக்குமோ, அதேபோலத்தான் படங்களிலும் நான் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கிறேன்.. தயவுசெய்து அதை படமாக மட்டும் பாருங்கள்.. இந்தப்படம் குடும்பத்தினருடன் அனைவரும் பார்க்கும்படியாக, குடும்பக்கதையாக எடுக்கப்பட்டுள்ளது” என கூறி முடித்தார்.

மம்முட்டி இப்படி குடும்பப்படம் என்கிற வார்த்தையை திரும்பத்திரும்ப அழுத்தி சொன்னதற்கு காரணம் இல்லாமலில்லை.. அவரது முந்தைய படமான ‘கசபா’ வெளியானபோது அந்தப்படத்தில் இடம்பெற்றிருந்த பல காட்சிகள், வசனங்கள் பெண்களை .இழிவுபடுத்துவதாக அமைந்திருந்ததாக கண்டனங்கள் எழுந்தன. மகளிர் அமைப்புகள் அந்தப்படத்தை தடைசெய்யவேண்டும் என மம்முட்டிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் கூட நடத்தினார்கள்.. அதனால் மம்முட்டி ரொம்பவே நொந்துபோனார்.. அவற்றை மனதில் வைத்துக்கொண்டுதான் முன்கூட்டியே இந்த புதிய படம் பற்றி அவர்களும் தெரிந்துகொள்ளட்டும் என்கிற மாதிரியும் அதேபோல, அவர்களுக்கு பதிலடி கொடுப்பது போலவும் இவ்வாறு பேசியுள்ளார் மம்முட்டி.

Leave a Reply