Sunday, November 3
Shadow

ரஜினி மனைவி நடத்தும் ஆசிரமம் பள்ளி ஆசிரியர்கள் போரட்டம்

நடிகர் ரஜினிகாந்தோட ஒய்ஃப் லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் ஸ்கூல் ஆசிரமம். இந்த ச்கூலில், போன 6 மாதமாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காததால் அங்கு பணியில் உள்ள அனைவரும் போராட்டம் ரெண்டு நாளைக்கு முன்னாடி நடத்திய மாதிரியே இன்னிக்கும் நடத்துனாங்களாம்.

சென்னனயில் மெயின் பகுதியான கிண்டியில் அமைத்துள்ள ஆசிரமம் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் 1,200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படிக்கறாங்க.இங்கு 75 டீச்சர்கள், 26 வேன் டிரைவர்கள் மற்றும் பணியாட்கள் வேலை செஞ்சி வருகின்றனர் .

இங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஆறு மாதங்களாக சம்பளம் வழங்காமல் உள்ளதாக கூறப்படுகிறது.
அதனால் ஓட்டுனர்கள் தீடீர் என பள்ளி வாகனங்களை இயக்காமல் போன வார கடசியிலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதே போல் ஆசிரியர்கள் சம்பளம் தராததால் கொந்தளித்து பள்ளி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பள்ளி நிர்வாகம் ஆசிரியர்கள் மற்றும் அங்கு பணியில் இருந்தவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் இன்னிக்கும் தீர்வு கிடைக்காததால் வரும் வெள்ளி அன்று கல்வி துறையினரிடம் புகார் கொடுக்க முடிவாம்

Leave a Reply