
இயக்குனர் ரஞ்சித் தமிழ் சினிமாவில் குறைந்த காலத்திலே தன் திறமையை நிரூபித்தவர் அதே போல் சில நேரங்களில் மிக பெரிய சர்ச்சையில் மாட்டிகொள்கிறார் அதுவும் கபாலி படம் வெளிவந்த பிறகு தான் அப்படி தான் தற்போது அவர் பேசியதும் கொஞ்சம் சர்ச்சையான விவகாரம்.
மதுரையில் மனிதக்கழிவு அகற்றுவோர் மறுவாழ்வு உரிமை கருத்தரங்கு ஆதித்தமிழர் கட்சியினரால் நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய இயக்குனர் ரஞ்சித், ” இந்தியா கலாசாரத்தில் ஒரு சிறந்த நாடு, பண்பாட்டில் சிறந்த நாடு என எல்லோரும் பெருமையாக பேசுவார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை இந்தியா ஒரு வெட்கம் கெட்ட நாடு என்றுதான் சொல்வேன்.
இந்த நாட்டில் நாகரிகம் கிடையாது. இந்த நாட்டில் மனிதனை மனிதனாக பார்ப்பதில்லை. இந்த ஆண்டில் மட்டும் 26 பேர் பாதாள சாக்கடையில் இறங்கி, இறந்து போயிருக்கிறார்கள். இந்த நிலை தொடர வேண்டுமா? உணவுக்காகத்தானே இந்த வேலையைச் செய்கிறோம். இந்த வேலையை செய்து சாவதை விட, சாப்பிடாமல் செத்துப்போகலாம்” என உணர்ச்சிப்பொங்க பேசினார்.
