
தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்துக்கொண்டிருக்கிறது.
அண்மையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதைதொடர்ந்து இப்படத்தின் டிரைலர் இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது. பரதன் பெயரில் உள்ள டிவிட்டர் கணக்கில் இந்த தகவல் வெளியானது. ஆனால் டிவிட்டரில் நான் இல்லை எனவும் யாரோ என் பெயரில் போலி கணக்கு தொடங்கியுள்ளார்கள் எனவும் அதேசமயம் அதில் கூறப்பட்டுள்ள தகவல் மட்டும் உண்மை எனவும் அவர்
