
கடவுள் இருக்கான் குமாரு படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ப்ரூஸ்லீ. இப்படத்தின் மூலம் நடிகர் ஜி.வி.பிரகாஷ் முதல்முறையாக ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார்.
இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக கிருத்தி கர்பண்டா நடித்துள்ளார். பிரபல தெலுங்கு மற்றும் கன்னட பட நடிகையான அவர், தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுவேயாகும். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்படம் வரும் பொங்கலன்று விஜய்யின் பைரவாவுடன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை இப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் டிவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் ” எங்கள் அண்ணன் பைரவாவுடன் வர்றோம்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
