
‘மெர்சல்’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முதலில் விஜய்யின் தொடக்க பாடல் மற்றும் சில காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மூன்று வாரங்கள் அங்கு படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. முக்கியமான ஆக்ஷன் காட்சிகள் அங்கு படமாக்கப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில், சண்டைப்பயிற்சி இயக்குநர்களாக தெலுங்கு திரையுலகின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்கள் ராம் மற்றும் லக்ஷ்மண் படக்குழுவுடன் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
விஜய்யின் 62-வது படமாக உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இதில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது முறையாக இணைந்திருப்பதால் ரசிகர்களிடையே இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படம் வருகிற தீபாவளி ஸ்பெஷலாக ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.