
கெளதம் மேனன் படங்கள் என்றாலே எப்ப வரும் என்பது ஒரு மிக பெரிய கேள்விகுறி தான் இவரின் படங்கள் என்றால் பஞ்சாயத்து இல்லாமல் வெளியும் வராது அப்படி மாட்டி சிக்கி சின்னாபின்னமாகும் படம் என்றால் அது தனுஷ்யின் என்னை நோக்கி பாயும் தோட்டா இந்த படம் எப்ப ஆரம்பித்த படம் ஆனால் இந்த படத்தின் ரிலீஸ் இன்னும் கேள்விகுறி தான் இதற்கிடையில் தனுஷ் செய்த காரியத்தால் நாயகி மேகாஆகாஷ் வாந்தியாம்
நடிகை மேகா ஆகாஷ் தனுஷுக்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் கவுதம் மேனன் இயக்கியுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் பல்வேறு இடங்களில் நடந்ததாம்.
அதனால் பல்வேறு ஊர்களில் பல விதமான உணவுகளை ருசித்தோம் என மேகா ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒருமுறை துருக்கியில் ஷூட்டிங் நடந்தபோது தெருவில் தனுஷ்-மேகா இருவரும் ஐஸ்கிரீம் சாப்பிடுவது போன்ற காட்சி படமாக்கினார்களாம். அப்போது தனுஷ் ஒரு கடையில் இருந்து இரண்டு பச்சை நிற ஐஸ்கிரீம் எடுத்து அவரிடம் ஒன்றை கொடுத்துள்ளார். அதை சாப்பிட துவங்கியபின் தான் தெரிந்தது டேஸ்ட் மிகவும் மோசமாக உள்ளது என்று. இருப்பினும் கேமரா ரோலிங்கில் இருப்பதால் அதை வெளிக்காட்டாமல் இயல்பாக இருப்பது போல நடித்தாராம்.
இயக்குனர் கட் சொன்ன அடுத்த நொடி இருவரும் ‘உவாக்..’ என அந்த ஐஸ்கிரீமை தூக்கி எறிந்துள்ளனர்.
ஏன் அந்த பச்சை கலர் தேர்ந்தெடுத்து கொடுத்தீர்கள் என தனுஷிடம் மேகா கேட்க, நான் ரேண்டமாகத்தான் எடுத்து கொடுத்தேன் என தனுஷ் மன்னிப்பு கேட்டாராம்.
பின்னர் ஒரு நல்ல பிளேவர் ஐஸ்கிரீமை வாங்கி இருவரும் சுவைத்துள்ளனர்.
