
பொதுவாக ஒரு பழமொழி சொல்லுவாங்க டாக்டர் புள்ள டாக்டர் அவங்க வாத்தியாரு புள்ள வாய்த்தியாறு என்று அது அந்த காலம் என்று தான் சொல்லணும் ஏன் என்றால் ஐந்த காலத்தில் திறமைக்கு மட்டும் தான் மதிப்பு திறமை இல்லை என்றால் ஒன்றும் இல்லை என்று இப்போது நிலைமை ஆகிவிட்டது. அதிலும் குறிப்பாக சினிமாவை பொறுத்தவரை திறமை லக் இருந்தா மட்டுமே வெற்றி கனி கிடைக்கும் ஒரு காலத்தில் அழகு கலர் இப்படி எல்லாம் பார்த்து நடிக்க வைப்பார்கள் ஆனால் இப்போது அழகு தேவை இல்லை திறமை மட்டும் தான் மக்களை கவருகிறது திறமை மூலம் பலர் வெற்றி கொடி கட்டிசினிமாவில் கோடி கொடியாக சம்பாதிகிரார்கள் ஆனால் ஒரு சிலர் பல போராட்டம் நடத்தியும் பக்க பலம் இருந்தும் வெற்றி கோடி கட்ட முடியவில்லை.
அதற்கு ஒரு எடுத்துகாட்டு தான் பாக்யராஜ் மகன் சாந்தனு அறிமுகமே பெரிய படம் இருந்தும் சோபிக்க முடியவில்லை அப்பாவின் பக்க பலம் இருந்தும் இன்னும் ஒரு வெற்றியை ருசிக்க முடியவில்லை. இதே அவர் அப்பா பாக்யராஜ் இந்தியாவின் தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவர் தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர் இப்படி இருந்தும் இவரால் வெற்றி என்ற கனியை பார்க்க முடியவில்லை ஆனால் இவரின் முயற்சி மட்டும் தொடர்கிறது அப்படி ஒரு முயற்சி தான் சாந்தனு பாக்கியராஜ் நடிப்பில் வெளி வந்து இருக்கும் படம் முப்பரிமானம் படத்தின் மூலம் இவரால் தமிழ் சினிமாவில் சாதிக்க முடியுமா என்று பொருத்து இருந்து பார்ப்போம்.
சாந்தனு பாக்யராஜ் ஸ்ருஷ்டி டாங்கே அப்பு குட்டி ஸ்கந்த அசோக் ரவி பிரகாஷ் தம்பிராமையாசாமிநாதன் மற்றும் பலர் நடிப்பில் ராசுமதி ஒளிப்பதிவில் ஜி. வி . பிரகாஷ் இசையில் அதிரூபன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் முப்பரிமாணம் இந்த படத்தை உலகம் முழுவதும் ஸ்ரீ தேனண்டால் பிலிம் வெளியிட்டுள்ளனர். சரி வாங்க படத்தின் கதை பாப்போம்
நாயகன் சாந்தனுவும், நாயகி சிருஷ்டி டாங்கேவும் பொள்ளாச்சியில் சிறு வயதிலேயே பக்கத்து பக்கத்து வீட்டில் ஒன்றாக வளர்ந்து வருகிறார்கள். சாந்தனுவின் அப்பா ஒரு போலீஸ்காரர். நாயகியின் அண்ணன் ரவி பிரகாஷ் ஒரு சாதி வெறியர். ஒருமுறை தனது சாதிக்காரப் பொண்ணு சாதி மாறி திருமணம் செய்துகொண்டதால், காதல் ஜோடியை கொலை செய்கிறார். இதனால், சாந்தனுவின் அப்பா அவரை கைது செய்து சிறையில் அடைக்கிறார்.
இதனால், சாந்தனுவின் குடும்பத்துக்கும் சிருஷ்டியின் குடும்பத்துக்கும் பகை ஏற்படுகிறது. சிருஷ்டியின் அப்பா தனது அரசியல் பலத்தை வைத்துக்கொண்டு சாந்தனுவின் அப்பாவுக்கு வேறு ஊருக்கு மாற்றல் வாங்கி கொடுக்கிறார். ரவி பிரகாஷையும் வெளியே கொண்டு வருகிறார்.
அவள்மீது உள்ள அளவு கடந்த காதலால் சாந்தனு, அவளது உயிரை இழக்க விரும்பாமல் காதலை மட்டும் விட்டுக்கொடுத்துவிட்டு, தன்னை வருத்திக் கொள்கிறார். போதைக்கு அடிமையாகி சிருஷ்டி டாங்கேவை மறக்க நினைக்கிறார். ஒருகட்டத்தில் போதைக்கு முழுவதும் அடிமையாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையும் பெறுகிறார்.
சிகிச்சை பெற்று வெளியே வரும் நாளில், சிருஷ்டி டாங்கேவுக்கும், நடிகரான ஸ்கந்தா அசோக்குக்கும் திருமணம் நடைபெறவிருக்கிறது. அப்போது திடீரென்று அந்த திருமணத்தின் உள்ளே புகுந்து, துப்பாக்கி முனையில் சிருஷ்டி டாங்கேவை கடத்திக்கொண்டு கேரளாவுக்கு செல்கிறார் சாந்தனு.
சாந்தனு மீது விருப்பமில்லாத சிருஷ்டி டாங்கேவை அவர் கடத்தி செல்ல காரணம் என்ன? சிருஷ்டி டாங்கே சாந்தனுவை வெறுக்க காரணம் என்ன? என்பதை பிற்பாதியில் விளக்கியிருக்கிறார்
சாந்தனு முதல் பாதியில் சாக்லேட் பாய் போல எப்பவும் வந்து போகிறார் இரண்டாம் பகுதியில் வில்லன் கலந்த ஒரு நடிப்பை வெளிபடுத்த முயற்சி செய்துள்ளார். இன்னும் முயற்சி தேவை சாந்தனு கெட்டப்யில் காமிக்கும் ஆரவத்தை கதையிலும் நடிப்பிலும் காமிங்க தயவுசெய்து.
சிருஷ்டி டாங்கே நாயகி பாவம் அவருக்கு என்ன வருமோ அதை எதிர்பார்க்கம அவரிடம் நடிப்பை எதிர்பார்த்தால் எப்படி அவரால் முடியும் படத்தில் வலுவான கதாபாத்திரம் ஆனால் இவருக்கு வரவில்லை நடிப்பு சிரித்தால் மட்டும் போதும் என்று நினைத்து விட்டார் போல தோணுது இயக்குனர் கதாபாத்திரதுக்கு எற்ப நாயகியை தேடி இருக்கணும்.
ஸ்கந்தா அசோக் படத்திலும் நடிகனாகவே வந்து, தனது நடிப்பால் அவரது கதாபாத்திரத்தை பூர்த்தி செய்திருக்கிறார். சாதி வெறி பிடித்தவராக வரும் ரவி பிரகாஷ் நடிப்பில் அசத்தியிருக்கிறார். படம் முழுக்க ஒரு வித்தியாசமான வில்லனாக இவரை பார்க்க முடிகிறது. தம்பி ராமையா, அப்புக்குட்டி, லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் காமெடிக்கென்று இருந்தாலும் இவர்களது காமெடி பெரிதாக எடுபடவில்லை.
இயக்குனர் அதிரூபன் பாலாவின் உதவி இயக்குனர் என்ற எதிர்பார்போடு போனால் ஏமாற்றம் தான் மிச்சம் சரி இவரின் திறமை என்று பார்த்தல் தன் குரு செய்யும் சைக்கோ விஷயங்கள் நாமும் செய்தால் வெற்றி என்று நினைத்து சொதப்பி விட்டார்.
படத்தின் ஒரே பக்கபலம் என்றால் அது ஒளிப்பதிவாளர் ராசாமதி அருமையான ரம்மியமான ஒளிப்பதிவு காட்சிகளுக்கு எற்ப ஒளிப்பதிவு.
மொத்தத்தில் முப்பரிமாணம் ஏமாற்றம் Rank 2/5
