
சுசித்ராவின் கணவரும் நடிருமான கார்த்திக், இந்த விவகாரம் குறித்து கூறியிருப்பதாவது: சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் இருந்து பதிவு செய்யப்படுபவை குறித்து சரியான புரிதல்களுடன் அணுகி எனக்குப் பக்கபலமாகப் பலரும் உள்ளார்கள். அந்தப் பதிவுகளில் மிக மோசமாகச் சித்தரிக்கப்பட்டவர்கள் என்னிடம் வந்து விளக்கம் கேட்டு மிகுந்த புரிதல் உணர்வுடன் செயல்பட்டார்கள். அவர்களிடம் மிகுந்த வெளிப்படையுடன் நான் சொன்னது – சுசித்ரா தற்போது உணர்வெழுச்சி நிலையில் உள்ளதன் வெளிப்பாடே அந்தப் பதிவுகள். சுசித்ராவின் நிலையை முழுவதுமாகப் புரிந்து பிரச்னையைச் சரிசெய்ய குடும்ப உறுப்பினர்கள் முயற்சி செய்துவருகிறோம். எனவே, தற்போது உணர்வுகள் அதீதமாக வெளிப்பட்ட நிலையில் அவர் வெளியிடும் பதிவுகளில் உண்மைத்தன்மை குறைவாக உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சூழலைப் புரிந்துகொண்டு, என்மீது அன்பு செலுத்தி நிலைமையைச் சுமூகமாக்கி வருகிறார்கள். இதில் தனிப்பட்ட பகையெதுவும் இல்லை, உணர்ச்சிவயப்பட்ட மனநிலையில் பதிவு செய்யப்பட்டவை என்பதை அவர்கள் புரிந்துகொண்டுள்ளார்கள்.
சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் வெளியிடப்படுபவை ஆதாரபூர்வமானவை அல்ல. இதை ஊடகங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். சூழலை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என எண்ணுகிறேன். உங்கள் குடும்பதில் ஒருவருக்கு நேர்ந்தால் எப்படி எடுத்துக்கொள்வீர்களோ அதுபோல எண்ண விரும்புகிறேன். எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிப்பதற்கு நன்று அப்படீன்னு சொல்லியிருக்கார்
இதில் குறிப்பாக நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் உண்மை தன்மை குறைவாக தான் இருக்கு என்று சொல்லி இருக்காரே தவிர உண்மை இல்லை என்று அவர் சொல்லவில்லை.
இதனால் இவர் தன் சொந்த கருத்தை பகிரிந்து இருக்கலாம் என்று தான் தெரிகிறது.
இவரின் கருத்திலும் முரண்பாடு இருக்கு என்று தான் தோன்றுகிறது மனநிலை பாதிக்கபட்டுளார்கள் என்று அவர் பகிரங்கமாகவும் அறிவிக்கவில்லை.
இதனால் இந்த விஷயத்தில் மேலும் குழப்பம் தான் தோன்றுகிறது .
