
வேடப்பன், ஒரு சந்திப்பில், சோக்கு சுந்தரம் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து இயக்குனர் ஆனைவாரி அ. ஸ்ரீதர் இயக்கும் நான்காவது படம் ‘கவலைப்படாத காதலர் சங்கம்’. இந்த படத்தின் மூலம் இயக்குனர் ஒரு தலை காதலால் ஏற்படும் பிரச்சனைகளை படமாக்குகிறார்.
மருத்துவர் மூவிஸ் சார்பில் திருச்செங்கோடு T.K.ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.
புதுமுகங்கள் கௌஷிக் மற்றும் ஹரி நாயகர்களாகவும் சுப்ரஜா நாயகியாகவும் நடிக்கிறார்கள். மேலும் படத்தில் கஞ்சா கருப்பு, அப்பு குட்டி, இமான் அண்ணாச்சி, அம்பானி சங்கர், தீப்பெட்டி கணேசன் மற்றும் ஷர்மிலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு : இரதன் சந்தாவத்
இசை : சௌந்தர்யன்
பாடல்கள் : யுகபாரதி, இளைய கம்பன் மற்றும் ஜெயங்கொண்டான்.
தமிழ் சினிமாவில் முதன் முறையாக F65 எனும் கேமராவை பயன்படுத்தி படமாக்குகிறார்கள். வரும் மார்ச் 13 முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு திருச்செங்கோட்டில் தொடங்குகிறது.
