Friday, April 17
Shadow

விஜய்க்கும் ரஜினிக்கும் வந்த சோதனை தமிழ் சினிமாவே ஆச்சிரியத்தில்

தற்போது நடக்க இருக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தல் மிகவும் சூடு பிடித்துள்ளது என்று தான் சொல்லணும் நான்கு அணிகள் போட்டி போடுகிறது இந்த நான்கு அணிகளும் அரசியவாதிகளைவிட மிக மோசமாக தாக்கி கொள்ளகிறார்கள் இதுல பல உண்மைகள் அரங்கேறுகிறது . கடந்த முறை வெற்றி பெற்று தலைவராக இருந்த தாணு அவர்களை பற்றி நிறைய உண்மைகளை வெளியிட்டார். ஞானவேல்ராஜா தாணு எப்படி நிர்வாகம் நடத்தினார் இவர் மூலம் தயாரிப்பாளர்கள் இல்லை இவரால் எதையும் சாதிக்க முடியவில்லை அப்புறம் எப்படி தயாரிப்பாளர்கள் பயன் அடைத்து இருப்பார்கள் என்று ஒரு கேள்வியை முன் வைத்தார். ஞானவேல் ராஜா

அது என்ன விஷயம் என்றால் இவர் தலைவர் பதவிக்கு வந்தால் பல தயாரிப்பளர்கள் படங்கள் தொலைக்காட்சி உரிமம் விற்காமல் உள்ளது இதை நான் விற்று தருவேன் என்று சொன்னார். ஆனால் யாருக்கும் அவர் சொன்னதை செய்யவில்லை மற்றவர்களக்கு விடுங்கள் இவரால் இவர் எடுத்த ரஜினியின் கபாலி மற்றும் விஜய்யின் தெறி படத்தின் தொலைக்காட்சி உரிமமம் விற்க முடியவில்லை. இவர் எப்படி அடுத்தவர்கள் படத்தை விற்ப்பார் என்று ஒரு கேள்விய எழுப்பினார். கவலை படாதீர்கள் நாங்கள் பதவிக்கு வந்தவுடன் நாங்கள் உங்களுக்கு அந்த படங்களின் உரிமத்தை விற்று தருகிறோம் என்று சவால் விட்டார் .

நமக்கு இப்ப தேவையான விஷயம் தமிழ் சினிமாவில் மிக பெரிய வெற்றியடைந்த தெறி, கபாலி படம் விற்கவில்லை என்பது மிகவும் ஆச்சர்யமான விஷயமாக உள்ளது. இது விஜய்க்கும் ரஜினிக்கும் வந்த சோதனை என்று தான் சொல்லணும் .

Leave a Reply