Tuesday, March 21
Shadow

‘தல 58’ படத்தின் இயக்குனர் இவர்தானாம் – உறுதியான தகவல்!

தல 57 அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் கிட்டத்தட்ட 9௦சதவீதம் படப்பிடிப்பு முடிந்த நிலைமையில் இந்த படத்தின் இருத்தி கட்ட வேளையில் மிக மும்முரமாக வேலைகளை செய்து வருகிறார். இயக்குனர் சிவா இந்த படம் முதலில் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று சொன்னார்கள் ஆனால் இந்த படத்தின் படபிடிப்பு பல்கேரியா நாட்டில் கடும் குளிரால் தாமதம் ஆனது இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தற்போது செப்டம்பர் மாதம் தான் என்று சொல்லி வருகிறார்கள்.

இந்த படத்தின் தாமதத்துக்கு முக்கிய காரணம் இந்த படத்தின் கதையமைப்பும் அந்த மாதிரி ஆகவே தான் இந்த படம் தாமதத்துக்கு காரணம் என்று படகுழ்வினரிடம் இருந்து கசிந்த தகவல்கள் அது மட்டும் இல்லாமல் இந்த படம் ஆங்கில படங்களுக்கு நிகராக இருக்கும் என்றும் கூறபடுகிறது இந்த படத்தில் இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் செய்யமுடியாத அளவுக்கு மிக சிறப்பாக அஜித் செய்து இருக்கிறார் என்றும் சில செய்திகள் கசிந்துள்ளது. சரி அஜிதிந்த படத்துக்கு அப்புறம் யார் இயக்குனர் என்ற கேள்வி மிகவும் பயங்கரமாக இருக்கு அதுக்கு விடைஇதோ

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விவேகம் படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து சிவா இயக்கத்தில் இரண்டு படங்கள் நடித்துவிட்ட நிலையில் அடுத்ததாக இவர் யார் படத்தில் நடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் அஜித்தின் அடுத்த பட இயக்குனர் ஒப்பந்தமாகிவிட்டதாகவும் வரும் செப்டம்பர் மாதம் விவேகம் ரிலீஸுக்கு பிறகு தல 58 படத்தின் இயக்குனர் மற்றும் மற்ற விஷயங்கள் அறிவிக்கப்படும் எனவும் நாம் ஏற்கனவே பார்த்தோம்.

அந்த இயக்குனர் வேறு யாருமில்லை, அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் என இரண்டு சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த விஷ்ணுவர்த்தன் தானாம். முன்னர் சோழர் காலத்து வரலாற்று கதை ஒன்றை எழுத்தாளர் பாலகுமாரனுடன் இணைந்து எழுதிவந்த விஷ்ணுவர்த்தன், தற்போது அதை டிராப் செய்து அஜித்துக்காக ஒரு கதையை எழுதி வருகிறாராம்.

குறிப்பு இந்த செய்தியில் கொஞ்சம் முரண்பட்டு இருப்பதாக அஜித் தரப்பில் இருந்து சொல்லப்பட்டுள்ளது இன்னும் தல 58 படத்தின் கதையும் இயக்குனரும் இன்னும் முடிவாகவில்லை என்பது தான் உண்மை என்று சொன்னதால் மன்னிக்கவும் தவறுக்கு வருந்துகுறேன்

Leave a Reply